Saturday, February 14, 2009

இந்தியா தான் "நம்பர்-1'


ஒரு சிறந்த ஒருநாள் அணியிடம் தான் நாங்கள் தோற்று இருக்கிறோம். இந்த தோல்வி எங்களுக்கும், ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை அளித்தது. தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலிய அணிகள் ரேங்கிங்கில் முந்தினாலும் துணைக் கண்டத்து அணியான, இந்தியா தான் பெஸ்ட். இதுதான் "நம்பர்-1'. இந்திய அணிக்கு பேட்டிங் தான் பலம். இவர்கள் சுழலுக்கு எதிராகவும் அசத்துவார்கள். "கூலான' கேப்டன் தோனி, நம்பிக்கைக்குரிய வீரராக இருக்கிறார். எதிரணிகளை பயமுறுத்துகிறார். உலகத்தரம் வாய்ந்த ஜாகிர் கான், இஷாந்த் சர்மா இருவரும் புதிய பந்தில் மிரட்டு கிறார்கள். ஹர்பஜன் அணிக்கு திரும்பி விட்டால், இன்னும் அணி வலுவானதாகிவிடும். இருந்தாலும் தோல்வி வலி தரக்கூடியது. எங்கள் தவறுகளை திருத்தி மீண்டு வந்தாலும், இந்திய அணியுடன் ஒப்பிடுகையில், அதிக தொலைவில் உள்ளோம்.

No comments: