Tuesday, February 24, 2009

மேல்மலையனூரில் மயான கொள்ளை



செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த மயானக் கொள்ளையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் மாசி பெருவிழா, நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இரண்டாம் நாள் விழாவான நேற்று, மயானக் கொள்ளை நடந்தது.கோவிலில் இருந்து, விஸ்வரூப கோலத்தில் மயானத்தில் எழுந்தருளிய அங்காளம்மன், அங்கு நடந்த மயானக் கொள்ளையில், பிரம்ம கபாலத்தை ஆட்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது.மயானக்கொள்ளை விடுவதற்காக, பக்தர்கள், உணவுப் பொருட்களை குவித்தனர். கோவிலில் இருந்து அங்காளம்மன் புறப்பட்டு வந்த போது, சாமி வந்து ஆக்ரோஷத்துடன் ஆடிய பக்தர்கள், தங்கள் பற்களால், உயிருடன் இருந்த கோழியை கடித்து அம்மனுக்கு பலி கொடுத்தனர்.


அம்மன் வேடமிட்ட அரவாணிகள் தங்கள் மீது நடந்துச் சென்றால், தோஷம் நீங்கும் என கருதி, பக்தர்கள் பலர் நீண்ட வரிசையில் படுத்தனர். அவர்கள் மீது அரவாணிகள் நடந்துச் சென்றனர். இதில், தமிழகம், கர்நாடகம், புதுச்சேரியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.200 ஆடுகளை கடித்து ரத்தம் குடித்த வாலிபர்கள்: ஆத்தூர்: சேலம் ஆத்தூர், வீரகனூர், கெங்க வல்லி உள்ளிட்ட பகுதிகளில் மயானக்கொள்ளை திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் திருவிழாவை காண வந்தவர்கள் ஏறி நின்ற மரம் முறிந்து 50 பேர் காயமுற்றனர். 200 க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் கோழிகளை, வாலிபர்கள் வாயால் கடித்து குதறினர். சுவேதா நதிக்கரையில் உள்ள மயானத்தில் இப்பகுதி மக்கள் அங்காள பரமேஸ்வரியை அலங்காரம் செய்து வைத்து வணங்கினர். இதற்கு சுடுகாட்டில் இருந்த எலும்புகள், மற்றும் பல் ஆகியவற்றை எடுத்து அலங்கரித்தனர்.


தொடர்ந்து வணங்கி 200 க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் கோழிகளை, வாலிபர்கள் வாயால் கடித்து குதறினர். பெண்கள் குழந்தை வரம் கேட்டு மடிப்பிச்சை கேட்டு ரத்தச்சோறு சாப்பிட்டனர். இந்த திருவிழாவை காண வந்த பக்தர்கள் வாத மரம் மீது ஏறி நின்றனர். இதில் மரம் முறிந்து விழுந்து 50 பேர் காயமுற்றனர். இவர்கள் அனைவருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. திருவிழாவையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ரத்தச்சோறு சாப்பிட்டால் வேண்டியது கிடைக்கும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். சென்னை தண்டையார் பேட்டையில் மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு மயான கொள்ளையில் அரக்கனை வதம் செய்ய பிரம்மாண்ட மணல் சிற்பம். தயாராக வடித்து வைக்கப்பட்டிருந்தது.

No comments: