Sunday, February 22, 2009

2 ஆஸ்கர் விருதுகளை வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான்.. 'ஜெய் ஹோ'!!!


நியூயார்க்: ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் மிகச் சிறந்த இசையமைத்தற்காக ஏ.ஆர்.ரஹ்மானு்ககு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தின் ஜெய் ஹோ பாடல் மிகச் சிறந்த பாடலாக தேர்வு செய்யப்பட்டு இன்னொரு விருதும் வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் பிரிவி்ல் ஒரு விருதும், ஜெய் ஹோ விருதுக்கு ஒரு விருதுமாக ரஹ்மான் இரு ஆஸ்கர் விருதுகளை வென்றார்.

ஒரிஜினல் ஸ்கோருக்கான முதல் விருதை வென்ற ரஹ்மான் ஆஸ்கர் விருது விழா நடக்கும் கோடாக் தியேட்டரில் இந்தப் படத்தின் பாடலான 'ஜெய் ஹோ' பாடலை மேடையில் ஆடல் பாடலுடன் அரங்கேற்றி ஆஸ்கர் அரங்கையே அதிரச் செய்தார்.

இந் நிலையில் சிறந்த பாடலுக்கான விருதும் ஜெய் ஹோவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மேடையில் ஆடிக் கொண்டிருந்த நிலையில் ரஹ்மானுக்கு இரண்டாவது விருதும் கிடைத்தது.

சவுண்ட் மி்க்சி்ங்-பூக்குட்டிக்கு:

இந்தப் படத்துக்கு சிறந்த சவுண்ட் மிக்சிங்குக்கான விருதும் கிடைத்துள்ளது. இந்த விருதை தமிழகத்தைச் சேர்ந்த சவுண்ட் மிக்சிங் நிபுணர் பூக்குட்டி வென்றுள்ளார்.

மேலும் சிறந்த இயக்குனர், எடிட்டிங் உள்பட ஸ்லம்டாக் மில்லியனர் மேலும் 5 விருதுகளையும் வென்றுள்ளது. மொத்தத்தில் இந்தப் படம் 7 விருதுகளை வென்றுள்ளது.

ரஹ்மான் விருதை வென்றதையடுத்து சென்னையில் உள்ள ரஹ்மானின் வீட்டில் பெரும் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. அவரது வீட்டில் குவிந்துள்ள ரசிகர்களும் உறவினர்களும் நண்பர்களும் கேக் வெட்டி ஆடிப் பாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவரது வீட்டின் வெளியில் ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடி வருகின்றனர்.

ரஹ்மானின் தங்கை ரெஹனா கூறுகையில், இந்த விருதை கடவுளுக்கு அர்ப்பணிக்கிறோம் என்றார்.

No comments: