Friday, February 20, 2009

12 இடங்களில் கொங்கு நாடு முன்னேற்ற பேரவை போட்டி

கோவை: லோக்சபா தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்க மாட்டோம். 12 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவோம் என புதிதாகப் பிறந்துள்ள கொங்கு நாடு முன்னேற்றப் பேரவை கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கொங்கு நாடு முன்னேற்றப் பேரவை கட்சி துவக்க விழா கோவையில் பிரமாண்டமாக நாடைபெற்றது.

இந்த நிலையில் அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் சிலர் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்தனர்.

இதனால் வரும் லோக் சபா தேர்தலில் கொங்கு நாடு முன்னேற்றப் பேரவை அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.



இந்த நிலையில்,கொங்கு நாடு மக்கள் முன்னேற்றப் பேரவை மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கோவையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

புதிதாக துவங்கப்பட்டுள்ள எங்கள் கட்சிக்கு திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், ஆகிய கட்சிகள் வாழ்த்து தெரிவித்து, நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்திருந்தனர்.

அந்த அடிப்படையில் தான் நாங்கள் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினோம். லோக் சபா தேர்தல் குறித்தோ, கூட்டணி குறித்தோ அவரிடம் எதுவம் பேசவில்லை.

கோவை, நீலகிரி, பொள்ளாட்சி, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கரூர் ஆகிய 12 தொகுதிகளில் கொங்கு நாடு முன்னேற்றப் பேரவை தனித்து போட்டியிடும் என்றார்.

ஒரே எதிரி ! - மாதவன்


சினிமாவில் எனக்கு சக நடிகர்களோ இயக்குநர்களோ எதிரிகள் கிடையாது. என் ஒரே எதிரி திருட்டு விசிடிதான் என்கிறார் மாதவன்.

மாதவன் கதாநாயகனாக நடித்து, விரைவில் திரைக்கு வர இருக்கும் படம், யாவரும் நலம். விக்ரம் கே.குமார் இயக்கி, பிக் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் இது. இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது.

நீண்ட நாட்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப்படம் கிட்டத்தட்ட கைவிடப்பட்டது என்றே கூறப்பட்டது. பின்னர் எப்படியோ தட்டுத் தடுமாறி பாடல் வெளியீடு வரை முன்னேறிவிட்டது.

விழாவில் இயக்குநர் பிரியதர்ஷன் வெளியிட ஆடியோவை வெளியிட, பிக் பிக்சர் தலைமை நிர்வாகி சுனிர் கேதர்பால் பெற்றுக் கொண்டார்.

விழாவில், நடிகர் மாதவன் கலந்துகொண்டார். அவர் பேசுகையில், "இந்த படத்தின் படப்பிடிப்பின்போது, பல பிரச்சினைகள் ஏற்பட்டன. ஒருவழியாக சமாளித்து ஆடியோ ரிலீஸ் வரை வந்துவிட்டோம். தமிழ், இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் படம் தயாரானதால், தனித்தனியாக படப்பிடிப்பு நடந்தது. முதலில் தமிழில் நடித்துவிட்டு, இந்தி படத்துக்காக மீண்டும் நடித்தேன்.

இந்த படத்தின் கதை இந்தியாவிலும், ஹாலிவுட்டிலும் இதுவரை வராத படம்.

இவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்கும் படம் இரண்டாவது நாளே திருட்டு சிடியாக வரும்போது மனசுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது.

சினிமாவில், எனக்கு எதிரி நடிகர்கள் அல்ல. திருட்டு வி.சி.டி.தான். இந்த தொழிலுக்கே மிகப் பெரிய எதிரி அது. இந்த படத்துக்கு அப்படி ஒரு எதிரி உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்...", என்றார்.

The Mummy Returns




மம்மி. படங்கள் உதவி நக்கீரன் !




ஏக்கபடி கபடி கபடி கபடி அஸ்ஸா உஸ்ஸா கும்தலக்கடி புஸ்ஸா கபடி கபடி கபடி....
ஆத்துல குறவை என்று ஒரு மீன் இருக்கும். நாட்டு மீன் வகையறா. ரொம்ப வழுக்கும். அதை பிடிக்க இப்படித்தான் ரெண்டு கையையும் சேர்த்து எடுத்துக்கிட்டு போயி ஒரே அமுக்...

பாவம் சாவியை கீழ போட்டுட்டார் போல...எப்படியும் கெடச்சிருக்கும்...கும்...கும்..பின்னால் ஒருவர் சாமி சன்னிதியில் நிற்பது போல நிற்பதை கவனிக்க...

எந்த எடத்துல போயி பத்திரிக்கை வைக்கிறார் பாருங்க...ஒருவேளை நல்லா படிங்க அப்படீன்னு சொன்னதுக்கு அங்கனயே புத்தகத்தை விரிச்சு படிச்சு காமிக்கறார் போல...பாதுகாப்பு அதிகாரியை பாருங்க....ஜிம்மி மாதிரி இல்ல ?

இளைய தபதி விஜய் அவர்களின் முழக்கம்

சிவபெருமானுக்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம்?
இதை எல்லாம் கேட்டால் நம்மளை முட்டாள்'ன்னு சொல்றாங்க தல.

இப்போது சில பல கேள்விகள்:

இவை எல்லாம் டாக்டர் விஜய் அவர்களின் பார்வைக்கு போகுமா?

எல்லாம் தெரிந்துமா அவர் சும்மா இருக்கிறார்?


தமிழ்நாட்டு பராக் ஒபாமா......!




பராக் ஒபாமா தமிழ் நாட்டில் பிறந்த்திருந்தால் இவர்களில் யாரவது ஒருவரை போல இருந்திருப்பாரோ....?

Thursday, February 19, 2009

சீமான் இன்றே கைது செய்யப்படுவார்: ஆற்காடு வீராசாமி

சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க. உள்ளிட்ட சில கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினை குறித்து பேச எழுந்தனர். ஆனால் சபாநாயகர் இதற்கு அனுமதிக்கவில்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஞானசேகரனை மட்டும் பேச அனுமதித்தார்.
இதையடுத்து ஞானசேகரன் ஒரு ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்து பேசுகையில், காங்கிரஸ் கட்சி மீது விடுதலைப்புலி ஆதரவாளர்கள், இலங்கை தமிழர்களை பாதுகாப்பதாக கூறிக்கொண்டு, குறி வைத்து தாக்கி வருகிறார்கள்.
மதுரையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேசுவரன் அலுவலகம், நாச்சியப்பன் எம்.பி. அலுவலகம், வேலூரில் என் அலுவலகம் ஆகியவை தாக்கப்பட்டுள்ளன. சத்தியமூர்த்தி பவன் முன்பு இருந்த பேனர்கள் எரிக்கப்பட்டுள்ளன. சத்திய மூர்த்தி பவன் உள்ளே புகுந்து தகர்த்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் இந்திராகாந்தி, சோனியா காந்தி படங்கள், சிலைகள் அவமதிக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் கொடிகள் எரிக்கப்படுகின்றன.
பொதுக்கூட்டம் என்ற பெயரில் நெல்லையில் வழக்கறிஞர்கள் போர்வையில், சினிமா டைரக்டர் சீமானை வரவேற்று பொதுக்கூட்டம் நடத்தி உள்ளனர். கோர்ட்டுக்குள்ளும் புகுந்து தாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
டைரக்டர் சீமான் எல்லா பொதுக்கூட்டங்களிலும் விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசுகிறார். சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய அவர், சினிமாவில் பெண்களை கற்பழிக்கும் வில்லனை எதிர்க்கும் கதாநாயகனுக்கு பாராட்டி பரிசு கொடுக்கிறார்கள். ஆனால் பிரபாகரனை குறை சொல்வது ஏன்? என்று கூறி உள்ளார்.
இப்படிப்பட்ட பேச்சுகளை போலீசார் கேட்டுக் கொண்டிருப்பது ஏன்? புதுச்சேரியில் இப்படி பேசிய டைரக்டர் சீமானை அங்குள்ள போலீசார் கைது செய்ய முயன்று வருகிறார்கள்.
ஆனால் அவர் தமிழ் நாட்டுக்குள்ளும், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயாதது ஏன்?
தொல்.திருமாவளவனும், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசி வருகிறார். இவர் மீதும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?
இவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயவேண்டும். யாருக்கோ பயந்து இந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் உள்ளதா?
தமிழ்நாட்டில் அமைதி ஏற்படவும், காங்கிரசாரை பாதுகாக்கவும், விடுதலைப்புலிகள் ஆதரிக்கப்படுவதற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஞானசேகரன் பேசினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் ஆற்காடு வீராசாமி,
காவல்துறை யாருக்கும் பயப்படாது. யாராக இருந்தாலும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். முதல் அமைச்சரிடமும் இது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது பற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டைரக்டர் சீமான், புதுச்சேரியில் 12.2.09 அன்று பேசியது தொடர்பாக அவரை கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதற்காக 5 தனி போலீஸ்படை அமைக்கப்பட்டுள்ளது. டைரக்டர் சீமானை போலீசார் தேடி வருகிறார்கள்.
கடலூர், ராயப்பேட்டை, அந்தியூர், வேலூர், மதுரை அண்ணா நகரில் காங்கிரஸ் அலுவலகம் தாக்கப்பட்டது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு சிலர் கைதாகி உள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் மீது குண்டர் சட்டத்தின்படியோ அல்லது தேசிய பாதுகாப்புச் சட்டப்படியோ காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும்.
அப்போது அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் பேசுகையில், டைரக்டர் சீமான் புதுச்சேரியில் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பேசி உள்ளார். நெல்லை பொதுக்கூட்டத்திலும் பேசி உள்ளார். அப்போது இந்த 5 போலீஸ்படை சீமானை கைது செய்யாமல் எங்கு போனது எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதாவையும், டைரக்டர் சீமான் மோசமாக பேசி உள்ளார். என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள்?
ஆற்காடு வீராசாமி: டைரக்டர் சீமான் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். இன்றோ அல்லது நாளையோ அவர் கைது செய்யப்படுவார் என்றார்.

லாலு பிரசாத் ஆட்டிக்குட்டி பால் குடிக்காததால் தாய் ஆட்டை பிடித்த அதிகாரிகள்


மத்திய ரயில்வே அமைச்சர் லாலுபிரசாத்துக்கு பரிசாக தரப்பட்ட ஆட்டிக்குட்டி பால் குடிக்காததால் தாய் ஆட்டை பிடித்த அதிகாரிகள், மதுரையில் இருந்து டெல்லிக்கு அனுப்பி வைத்தனர்.
லாலு பிரசாத் கடந்த 8ஆம் தேதி செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை தொடங்கி வைக்க திருச்செந்தூருக்கு வந்தார். அப்போது அவருக்கு முக்காணியைச் சேர்ந்த சிலர் ஆட்டுக்குட்டியை பரிசாகத் தந்தனர். பரிசாக தந்த ஆட்டுக்குட்டியை லாலு டெல்லிக்கு கொண்டு சென்றார்.
அங்கு லாலுவின் பேரக் குழந்தைகளின் முழுநேர தோழனாக மாறிவிட்ட ஆட்டுக்குட்டி திடீரென பால் குடிக்க முறுத்ததால் உடல் நலம் பாதித்தது. தாய் பாசத்தில் குட்டி தவிக்கிறது. தாய் ஆட்டைக் கொண்டு வந்தால்தான் உடல்நிலை தேறும் என்று கால்நடை மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
உடனடியாக தெற்கு ரயில்வே அதிகாரிகளை தொடர்பு கொண்ட லாலுவின் உதவியாளர், விரைவாக தாய் ஆட்டை டெல்லிக்கு அனுப்ப ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறினார்.
லாலுவுக்கு ஆட்டுக்குட்டியை பரிசளித்தது யார் என்று ரயில்வே அதிகாரிகள் விசாரித்ததில், திருச்செந்தூர் அருகே உள்ள முக்காணியை சேர்ந்தவர்கள் ஆட்டுக்குட்டியை பரிசளித்தது தெரியவந்தது.
இதையடுத்து ஆத்தூர் போலீசார் உதவியுடன் முக்காணிக்கு விரைந்த ரயில்வே அதிகாரிகள். அங்கு ஆட்டுக்குட்டியை பரிசளித்தவர்களிடம் கேட்டபோது, முடிவைத்தானேந்தலை சேர்ந்த ஒரு விவசாயி ஒருவரிடம் இருந்து குட்டியை விலைக்கு வாங்கயிதாக கூறினர்.
இதன்பின்னர் முடிவைத்தானேந்தலுக்கு 3 குவாலிஸ் காரில் சென்ற அதிகாரிகள், அந்த விவசாயியை சந்தித்து பேசினார்கள். ஆட்டுக்குட்டி பால் குடிக்காததை அறிந்த விவசாயி, தாய் ஆட்டை இலவசமாகவே கொடுத்தார். பின்னர் ஆட்டுடன் மதுரைக்கு அதிகாரிகள் புறப்பட்டனர்.
தாய் ஆடு இன்று குளு குளு ரயில் பெட்டியில் மதுரையில் இருந்து டெல்லிக்கு செல்கிறது.

செயற்கைகோள் மூலம் பின்லேடன் ஒளிந்திருக்கும் இடம் கண்டுபிடிப்பு

சர்வதேச பயங்கரவாதியான பின்லேடன், கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருந்து வருகிறான். அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தகர்ப்பு உள்ளிட்ட பல்வேறு நாசவேலைகளில் தொடர்புடைய அவனை, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமாக தேடி வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட விஞ்ஞான ரீதியான ஆய்வில், பின்லேடன் ஒளிந்திருக்கும் இடம் பற்றிய தகவல் தெரிய வந்துள்ளது.
செயற்கை கோள் உதவியுடன் நடைபெற்ற புவியியல் ஆய்வில், பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பராசினார் நகரில் அவன் பதுங்கி இருக்கும் விவரம் தெரிய வந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து பாகிஸ்தானுக்குள் 12 மைல் உட்புறமாக அமைந்திருக்கும் பராசினாரில், சுற்றுச்சுவருடன் கூடிய 3 கட்டிடங்களில் ஒன்றில் பின்லேடன் மறைந்திருக்கலாம் என்று, ஆய்வுக்குழுவின் தலைவர் தாமஸ் கில்லஸ்பி தெரிவித்திருக்கிறார். விமானங்களின் பார்வையில் இருந்து தப்புவதற்காக, அவன் ஒளிந்திருக்கும் கட்டிடம் மரங்களால் சூழப்பட்டுள்ளது.
பின்லேடன் தனிமையில் ஒளிந்து இருந்தாலும், அவனுக்கு பாதுகாப்பாக சில மெய்க்காப்பாளர்கள் இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. மின்சார வசதியுடன் கூடிய அந்த மறைவிடத்தில் பின்லேடனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வரலாம் என்றும் தாமஸ் கில்லஸ்பி கூறி இருக்கிறார்.
பின்லேடன் தொடர்பாக கிடைத்த பல்வேறு புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட செயற்கை கோள் படங்கள் மற்றும் இதர தொழில் நுட்ப உதவியுடன் இந்த ஆய்வு நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

war between police and lawyers in madras high court

Ponting decides to give IPL a miss

Ricky Ponting, the Australia captain, has decided to skip the 2009 season of the IPL because of his country's packed international schedule. Ponting felt he wouldn't be able to give his all for his country if he used his two-week break from national duty to play for the Kolkata Knight Riders. "My country comes first and there was no way I could give my all for Australia if I used the only two-week break we have to go and play in India," Ponting wrote in his column in the Australian. "I have been talking with my team, the Kolkata Knight Riders, for a month or two now and in the end my only choice was to withdraw from the 2009 competition, but I will most certainly be back for 2010 when I hope to be able to make a much greater contribution. The franchise has been fantastic about the whole thing and I want to thank them for their understanding."


Australia are currently in South Africa where they are scheduled to play three Tests, two Twenty20 internationals and five ODIs. This series comes soon after the end of the Australian summer, during which the team played home Test and ODI series against South Africa and New Zealand. The Australian selectors wanted Ponting to take a break during the five-ODI series against New Zealand but he returned to the squad after Australia conceded a 2-0 lead to the visitors.
"As everybody is aware, I could not really take a break through the Australian summer," Ponting wrote. "However, I have to say that I had been talking with my manager about not playing the IPL well before any issues came up about me having a break, or, as it turned out, not having a break, during the one-day series against New Zealand.
"Part of the reason I decided to withdraw from the IPL is that Twenty20 is such a physically demanding game and you have to be at your best to play the game and I want to be at my best for the [Twenty20] World Cup. "
After the tour of South Africa ends in April, Australia are scheduled to play an ODI series against Pakistan, following which is the two-week gap when Australia's players are expected to be available for the IPL. However, the itinerary is packed after the break with the ICC World Twenty20 in England followed by the Ashes, ODIs in England, a bilateral series in India, a Test series against Pakistan and the Australian summer.
Joy Bhattacharya, Kolkata's team director, confirmed the franchise will seek a replacement. "We are looking for a replacement and are bargaining hard with two or three players already. We are looking for a batsman who will be an able replacement," he told Cricinfo. "The rules for a replacement says that if for any reason a player is unavailable for the entire season, only then a player from the auction list [the original auction list of 110-odd] can be picked."
Ponting is the third high-profile Australian to miss the 2009 season of the IPL after fast bowler
Mitchell Johnson and vice-captain Michael Clarke, both of whom did not take part in the inaugural season either.

முந்துவது சன்டிவியா? கலைஞர் டிவியா?--- ஒரு பார்வை


சன் தொலைக்காட்சியும்,கலைஞர் தொலைக்காட்சியும் பாடல் ஒளிபரப்புவதில் இருந்து சேனல் துவங்குவது வரை எல்லா நிலையிலும் மல்லுக்கட்டிக் கொண்டு நிற்கின்றன்.. மேலோட்டமாகப் பார்த்தல் சபாஷ் சரியான போட்டி என்றே தோன்றும். கொஞ்சம் அலசி ஆராய்ந்து பார்த்தால் உண்மை புரியும். கலைஞர் தொலைக்காட்சி தொடங்குவதற்கு முன்பு வரை சன் கொஞ்சமாக போட்டிப்போட்டுகொண்டு தன்னுடைய ஆதிக்கத்தை பரவவிட்டது... முதலிடத்தை தக்கவைத்துகொண்டது... கலைஞர் தொலைக்காட்சி ஆரம்பித்ததற்கு அப்புறம் தொய்வு கொஞ்சம் அதிகமாகியது. எல்லா நிலையில் இருந்தும் கடும் போட்டி உருவானது.நம்ம பதிவர்களும் போட்டிப்போட்டுக்கொண்டு சன்னை முந்துகிறது கலைஞர் பயங்கரமா எழுத ஆரம்பிச்சாங்க....ஆனால் மக்கள் பார்வையில் இருந்து எப்படியாவது சன்னை முந்தி முதலிடத்துக்கு வர கலைஞர் தொலைக்காட்சி ரொம்பவே பகீரத முயற்சி எடுத்தது..அதில் ஓரளவுக்கு வெற்றியும் கண்டார்கள். குடும்ப சண்டைக்கு பிறகு சன் நடுநிலைமை எனும் கண்ணாடியை மாட்டிக்கொண்டு எந்த அளவுக்கு ஆட்சிக்கு எதிரான செய்திகளை வெளிக்கொணர முடியுமோ அந்த அளவுக்கு திறமையா செயல்பட்டது. சன்னின் நடுநிலைமையால் ஜெயாவே கொஞ்சம் ஆச்சரியப்பட்டது... முக்கியமா மின்வெட்டு, ஸ்பெக்ட்ரம் பிரச்சினைகளில் எந்த அளவுக்கு விளையாமுடியுமோ அந்த அளவுக்கு புகுந்து விளையாடுனாங்கோ..இதுக்கு விளக்கம் சொல்லி முடியல கலைஞர் தொலைக்காட்சிக்கு. இந்த கூத்தெல்லாம் கண்கள் பணித்தது இதயம் இனிக்கும் வரைக்கும்தான் இருந்தது...இதுக்கு அப்புறம் மின்வெட்டு கிலோ எவ்ளோ? ஸ்பெக்ட்ரம் எந்த ஊர்ல இருக்கு அப்படின்ற ரேஞ்சில தான் சன்னின் நடுநிலைமை இருந்திச்சி... கலைஞர் தொலைக்காட்சியை தன் வழிக்கு கொண்டு வரவே சன் தொலைக்காட்சி நடுநிலைமை என்ற முகமூடியை அணிந்து கொண்டிருந்தது... இப்போதைக்கு தமிழக மக்கள் சன் தொலைக்காட்சி இல்லைனா கலைஞர் தொலைக்காட்சிதான் பாக்கனும் என்பதில் மிக முனைப்போடு போட்டிப்போடுக்கொண்டு சேனல்களை ஆரம்பித்து வருகிறார்கள். தமிழக கேபிள் டிவி ஆப்பரேட்டர்களில் பெரும்பான்மையோர் திமுக அனுதாபிகள் மற்றும் திமுக பிரமுகர்களாக இருப்பது இரு நிறுவங்களுக்கும் ஆதாயமே.இப்படி எல்லா நிலையிலும் போட்டி போடும் கலைஞர் மற்றும் சன் தொலைக்காட்சிகள் ஒரு விசயத்தில் மட்டும் ஒற்றுமையாக இருப்பதுதான் வேதனைக்குறிய விசயம். அது என்னன்னு உங்களுக்கே தெரியும். ஈழப்பிரச்சினை சன்னாவது பரவாயில்லை மேம்போக்கா ஏதோ சொல்றாங்க.. ஆனா கலைஞர் தொலைக்காட்சி இந்த விசயத்தில் மவுனமாக இருப்பது வேதனைக்குறிய வெட்கப்படவேண்டிய விசயம். இதுக்கு உதாரணம் இலங்கை சுதந்திர தினத்தன்று ராஜபக்ஷே பேசியதை தலைப்பு செய்தியிலும் முதலாவதா சொல்லி காங்கிரசு கட்சியின் மானத்தை காப்பாற்றி விட்டது கலைஞர் தொலைக்காட்சி. இன்று நக்கீரன் குழுமத்திற்கு இலங்கை தூதுவர் கொடுத்த மிரட்டல்,மக்கள்,தமிழன் தொலைக்காட்சிகள் இலங்கையில் ஒளிபரப்ப தடை போன்ற விசயத்திலும் மவுனத்தை சாதிப்பது கொடுமையிலும் கொடுமை......

ஏலத்துக்கு வந்த உதயம் காம்ப்ளக்ஸ்!


தலைநகர் சினிமா ரசிகர்களின் மறக்க முடியாத திரையரங்குகள் அமைந்த உதயம் காம்ப்ளக்ஸ் ஏலத்துக்கு வந்துள்ளது.சென்னை அசோக்நகரில் உள்ளது உதயம் காம்ப்ளக்ஸ். இதில் உதயம், சூரியன், சந்திரன் மற்றும் மினி உதயம் என 4 தியேட்டர்கள் உள்ளன. 1983ல் இது கட்டப்பட்ட இந்த திரையரங்க வளாகம் தமிழ் சினிமாவின் சாதனைகள் பலவற்றுக்கு சான்றாகத் திகழ்ந்தது.உதயம் காம்ப்ளக்சின் 4 தியேட்டர்களிலும் 2,198 இருக்கைகள் உள்ளன. சத்யம், அபிராமி தியேட்டர்களுக்கு அடுத்தப்படியாக சென்னை நகரில் பெரிய திரையரங்க வளாகம் இதுவே.ஆனால் இந்த தியேட்டரின் பங்குதாரர்களுக்குள் ஏகப்பட்ட பிரச்சனைகள். ஒரு கட்டத்தில் கோர்ட்டுக்கு சென்று திரையரங்குகளை விற்க வற்புறுத்தினர் இந்தப் பங்குதாரர்கள். இதையடுத்து 4 தியேட்டர்களையும் ஏலம் விட கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அடிப்படை ஏல தொகையாக ரூ.100 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.உதயம் காம்ப்ளக்சின் மொத்த பரப்பளவு 1.31 ஏக்கர். (23.8 கிரவுண்ட்) 2400 சதுர அடிக்கு (ஒரு கிரவுண்ட்) ரூ.4.2 கோடி என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏலம் எடுப்பவர் தொடர்ந்து திரையரங்குகளை நடத்துவாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.காரணம் ரூ.100 கோடிக்கு ஏலம் எடுப்பவர், போட்ட முதலை திரும்பவும் சினிமாவிலேயே ஈட்டுவது இந்த நெருக்கடியான காலகட்டத்தில் சாத்தியமா என்று தெரியவில்லை. அல்லது சிட்டி சென்டர் மாதிரி மல்டிப்ளெக்ஸுடன் கூடிய வணிக வளாகமாக மாற்றி விடுவார்கள் என்றும் பேசப்படுகிறது.மேம்பாலம் காரணமா?:அசோக் பில்லர் பகுதியில் பெரிய மேம்பாலும் கட்டும் திட்டம் உள்ளதாகவும், இதைத் தெரிந்து கொண்டதால்தான் இந்தத் திரையரங்கை விற்கிறார்கள் என்றும் ஒரு தரப்பினர் தெரிவிக்கிறார்கள்.கடந்த வருடம் மட்டும் வசந்தி, வாணி, ஜெயப்பிரதா, காமதேனு, நேஷனல், ராஜ் ஆகிய 7 தியேட்டர்கள் மூடுவிழா கண்டுள்ளன. இவை வணிக வளாகமாகவும் குடியிருப்புகளாகவும் மாறிவிட்டன.மைலாப்பூரில் உள்ள காமதேனு, கபாலி தியேட்டர்கள் மூடப்பட்டுவிட்டன. அண்ணா சாலையில் இருந்த வெலிங்டன், ஆனந்த், சபையர், சன், அலங்கார், கெயிட்டி, பிளாஸா மற்றும் பாரகன் திரையரங்குகளும் மூடப்பட்டுவிட்டன.இப்போது நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் உதயமும் தன் இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்டது நிச்சயம் சினிமா ரசிகர்களுக்கு சந்தோஷமான செய்தியாக இருக்காது!.

நான் கடவுள் இல்லை - சச்சின் டெண்டுல்கர்


ரசிகர்கள் தன் காலில் விழுவதை தாம் விரும்பவில்லை என்றும் தான் கடவுள் இல்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
இனி ரசிர்கள் யாரும் தங்கள் ரத்தத்தால் கடிதம் எழுதி அனுப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக திகழும் சச்சின் டெண்டுல்கர் பிரபலமான ஓகே இதழுத்க்கு பேட்டி அளித்துள்ளார். இந்தப் பேட்டியில் ரசிர்கள் தமக்கு ரத்தத்தால் கடிதங்கள் எழுதியிருப்பதாகவும், அவற்றை பெற தாம் விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதே போல் சில ரசிர்கள் தம்மை பார்த்தவுடன் தம்மை கடவுளாக பாவித்து காலில் விழுவதை பழக்கமாகக் கொண்டுள்ளனர் என்றும், ஆனால் அவை தம்மை மகவும் சங்கடப் படுத்துவதாகவும் கூறியுள்ளார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்று கூறியுள்ள சச்சின், எனினும் ஓய்வு பெற்ற பின்னர் தாம் பிசினஸ் செய்யப் போவதாக கூறியுள்ளார்.
இப்போதைக்கு தமது கவனம் முழுவதும் கிரிக்கெட்டில் மட்டுமே உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமக்கு கிடைத்துள்ள பெரும் புகழ் சாதாரண மக்களால் சமாளிக்க முடியாத பிரச்சனைகளை சந்திக்க உதவி புரிந்துள்ளது என்று அவர் தெரிவித்தார். கடந்த 1994ம் ஆண்டு ஆண்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது தமக்கு அந்த அனுபவம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.
தாமும் இரண்டு வீரர்களும் வெளியே சென்றிருந்ததாகவும், திரும்பி வருவதற்குள் சக வீரர்கள் அனைவரும் தங்களது உடைமைகளையும் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டதாகவும், பின்னர் தாமும் இரு வீரர்களும் சிட்னி சென்று அங்கிருந்த விமான நிலைய அதிகாரியை சந்தித்து பிரச்சனையை விளக்கியபோது, தம்மை அடையாளம் கண்டு கொண்ட அந்த அதிகாரி, பாஸ்போர்ட் கூட இல்லாத நிலையில் தங்கள் பயணத்திற்கு உதவியாதாக கூறினார்.
சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை கடைசி நாள் ஆட்டத்தில் வீழ்த்திய அனுபவத்தை தம்மால் மறக்க முடியாது என்றும் சச்சின் கூறினார்.

அடக்கமாய் இருக்கணும்-சொல்வது சிம்பு!!


தமிழ் சினிமாவில் அடக்கமாய் இருப்பவர்களே சாதித்துள்ளனர். அதிகமாக `பில்டப்' பண்ணுகிறவர்கள் பெரிய ஆளாக இருக்க முடியாது. பெரிய ஆளாக இருப்பவர்கள் அதிகமாக `பில்டப்' பண்ண மாட்டார்கள், என்று பேசியுள்ளார் நடிகர் சிம்பு.

பிரமிட் சாய்மீரா வழங்க, அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்த `சரோஜா' படத்தின் 100வது நாள் விழா, சென்னை காமராஜர் அரங்கில் நடந்தது.

விழாவில் கவிஞர் வாலி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது:

என்னிடம், எப்படி இன்னும் இளமையாக பாட்டு எழுதறீங்க? எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்க என்பார்கள். இளமையை உடலில் கொண்டு வர முடியாது. உள்ளத்தில் கொண்டு வரலாம். அதான் என் பாடல்களின் இளமை ரகசியம்... வேற ஒண்ணுமில்லை.

இந்த படத்தை டைரக்டு செய்த வெங்கட்பிரபு, தமிழ் திரையுலகில் மிகப்பெரிய டைரக்டராக வருவார் என்றார் வாலி.

பின்னர் நடிகர் சிம்பு பேசினார்:

தமிழ் சினிமாவில் அடக்கமாய் இருப்பவர்களே சாதித்துள்ளனர். அதிகமாக `பில்டப்' பண்ணுகிறவர்கள் பெரிய ஆளாக இருக்க முடியாது. பெரிய ஆளாக இருப்பவர்கள் அதிகமாக `பில்டப்' பண்ண மாட்டார்கள் இதற்கு உதாரணமாக ஏ.ஆர்.ரகுமானைக் குறிப்பிடலாம். அவருடைய தன்னடக்கத்துக்குத்தான் ஆஸ்காருக்கு இணையான `கோல்டன் குளோப்' விருது கிடைத்து இருக்கிறது.

ஏ.ஆர்.ரகுமானை அடுத்து தன்னடக்கமான இசையமைப்பாளர், யுவன்சங்கர்ராஜாதான். கோல்டன் குளோப் போன்ற விருதுகளை பெற தகுதியானவர் ஏ.ஆர்.ரகுமானை அடுத்து யுவன் தான் என்றார் சிம்பு.

விழாவில் டைரக்டர்கள் கே.பாலசந்தர், கே.எஸ்.ரவிகுமார், தரணி, ஜெயம் ராஜா, நடிகர்கள் சூர்யா, ஸ்ரீகாந்த், நடிகைகள் ஸ்னேகா, அம்பிகா உள்பட பலர் பங்கேற்றனர்.

பட அதிபர்கள் கே.எஸ்.சீனிவாசன், எல்.கே.சுதீஷ் ஆகியோர் கலந்துகொண்டு படத்தில் நடித்த நடிகர்-நடிகைகளுக்கு கேடயங்களை வழங்கினார்கள்.

பிலிம்சேம்பர் தலைவர் கே.ஆர்.ஜி, நடிகைகள் சங்கீதா, சந்தியா, விஜயலட்சுமி ஆகியோரும் விழாவுக்கு வந்திருந்தனர்.

chennai law college fight-12/11/2008

ரஜினியை இயக்குவீர்களா? – ஏ.ஆர்.முருகதாஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இப்போதைக்கு படம் இயக்கும் வாய்ப்பு இல்லை என இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் அளித்த பேட்டி:தமிழில் பெரிய ஹிட்டான படம்தான் கஜினி. இந்தியிலும் அந்த வெற்றி கிடைத்தாலே போதும் என்றுதான் நினைத்தேன்.இப்படத்துக்கு அமீர்கான் அளித்த ஒத்துழைப்பு அசாத்தியமானது. எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். எந்த சீனையும் மாற்ற சொல்லவில்லை. கிளைமாக்ஸ் காட்சியை மட்டும் மாற்றினேன். ஆசினும் சிறப்பாக நடித்தார்.சரி கஜினியை விடுங்க... ரஜினியுடன் இணைந்து படம் செய்வதாக உங்கள் பெயர் அடிக்கடி பரபரப்பாக பேசப்படுகிறதே...?ரஜினி சாரை வைத்து நான் படம் இயக்கப்போவதாக பலமுறை செய்திகள் வந்துள்ளன. நான் ரஜினி சாரை சந்தித்தது என்னமோ உண்மைதான். ஆனால் படம் செய்வது குறித்தெல்லாம் எதுவும் முடிவாகவில்லை. இப்போதைக்கு அதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே நினைக்கிறேன்.மற்றபடி அவரிடம் நிறைய பேசியிருக்கிறேன். அவர் அளவுக்கு சினிமா அறிவு கொண்டவர்களை நான் பார்த்ததில்லை. மனதிலிருப்பதை வெளிப்படையாகப் பேசிவிடுவார்.இப்போதைக்கு நான் சொல்ல விரும்புவது, அடுத்த படமும் இந்தியில்தான் இயக்குகிறேன். ஆமீர்கான்தான் இதிலும் ஹீரோ என்றார் முருகதாஸ்.

Indian Cricket Team - New Dress Colour




Indian Cricket Team adopts new Dress Colour for ODI.
Today the color of new Dress is reveled and the Colour of Indian Teams Dress is Dark Blue.
Earlier the colour of Indian Cricket ODI dress was light Blue.
So dark Blue is the new Jersey of Indian Cricket Team.
I saw Indian Captain in this new Dark Blue Jersey (Dress) in TV.
I dont have photos of new dress colour of Indian Cricket Team.
Apart from Dhoni , Zaheer Khan , Ishant Sharma , Rohit Sharma ,Gautam Gambhir , Yuvraj Singh etc was there in the launching ceremony of new Indian Jersey.
But i think the Old light Blue Jersey was good for Indian Players as that colour gives confidence and that light blue became the Emblom of Indian Cricket.
Every Cricket lover liked that light Blue Dress , but the new color is also equally good.
Apart from dress code players form and performance matters in ODI and in Test Cricket.
But there is no change of Test Cricket Dress Colour of Team India. Thats old white colour.

Wednesday, February 18, 2009

சேவாக் - ஒரு சகாப்தம்

சென்னை சேப்பாக்கம். சிதம்பரம் மைதானத்தில், 1983 - 84 ஆம் ஆண்டில், கவாஸ்கர் அடித்த 236 ஓட்டங்களே இதுவரையில் அதிகபட்சமாக இருந்தது. அதை (மார்ச்சு, 28,2008) சேவாக் முறியடித்து மைதானத்தில் புதிய சாதனை செய்து இருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

முதல் விக்கெட்டுக்கு ஜாபரும், சேவாக்கும் 213 அடித்தனர். மேலும் இரண்டாவது விக்கெட் விழுவதற்கு முன்னரே மீண்டும் மற்றொரு 234 ஓட்டங்களை இது வரை பெற்றுள்ளனர். இது ஒரு உலக சாதனை.லாரா மற்றும் பிராட்மேன் இருவர் மாத்திரமே உலகில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், இரண்டுமுறை 300 ஓட்டங்களுக்கு மேல் பெற்றவர்கள் ஆவார்கள். அவர்கள் வரிசையில் சேவாக் இன்று முதல் இணைந்துள்ளார்.278 பந்துகளில், 300 ஓட்டங்கள் எடுத்து அவர் லாரா, பிராட்மேன் வரிசையில் இணைந்தார்.41 முறை நான்கு ஓட்டங்களும், 5 முறை ஆறு ஓட்டங்களும் பெற்று இச்சாதனையைச் செய்து ஆடுகளத்தில் ஆடிக்கொண்டிருக்கிறார். டிராவிட்டும் பொறுமையாக ஆடி சேவாக்குக்கு ஒத்துழைப்புக் கொடுக்கிறார்.வலையுலக நண்பர்களின் பிரார்த்தனையின் உதவியுடன் 'வீரேந்திர சேவாக்' 300 ஓட்டங்களை எடுத்துள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

வலையுலக நண்பர்களுக்கு எனது நன்றிகள்.குறைந்த பந்துகளில் 300 ரன்: சேவாக் சாதனைசென்னை சேப்பாக்கத்தில் தென்ஆப்ரிக்க அணிக்கு எதிராக நடந்து வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்தியாவின் வீரேந்தர் சேவாக் 300 ரன் சேர்த்து புதிய உலக சாதனையைப் படைத்தார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இருமுறை 300 ரன்களை கடந்த 3-வது வீரர் என்ற பெருமையை சேவாக் பெற்றுள்ளார்.2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 52 ரன்களுடன் களத்தில் இருந்த சேவாக், இன்றைய ஆட்டத்தை அதிரடியாகத் துவக்கினார். மதிய உணவு இடைவேளைக்கு முன் தனது 14-வது சதத்தை பூர்த்தி செய்தார்.மறுமுனையில் ஆடிய ஜாபர் 73 ரன்னில் ஆட்டமிழந்தாலும், அடுத்து களமிறங்கிய டிராவிட் விக்கெட் சரிவு ஏற்படாமல் சேவாக்குடன் இணை சேர்ந்து விளையாடினார்.தேநீர் இடைவேளைக்கு முன் 200 ரன்களை (194 பந்துகளில்) சேவாக் கடந்தார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்ட 3வது இரட்டை சதம் இதுவாகும்.

சேவாக்கை வெளியேற்ற தென்ஆப்ரிக்க பந்து வீச்சாளர்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பலனளிக்கவில்லை. அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய சேவாக் 225 பந்துகளில் 250 ரன்களை கடந்தார்.இதற்கிடையில், மறுமுனையில் மிக நிதானமாக விளையாடிய டிராவிட் 151 பந்துகளில் அரைசதம் பூர்த்தி செய்தார்.இன்னிங்சின் 101-வது ஓவரில் சேவாக் 300 ரன்களை கடந்ததுடன், குறைந்த பந்துகளில் (278) 300 ரன் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.இதற்கு முன் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 362 பந்துகளில், ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன் 300 ரன் எடுத்ததே அதிவேக முச்சதமாக கருதப்பட்டது.கடந்த 1932-33ம் ஆண்டில் வேல்லி ஹம்மண்ட் என்பவர் நியூசிலாந்துக்கு எதிராக 355 பந்துகளில் முச்சதம் கடந்ததாக கூறப்பட்டாலும், அதுகுறித்த ஆதாரங்கள் எதுவுமில்லை எனக் கூறப்படுகிறது.டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன், வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிரையன் லாரா ஆகியோர் மட்டுமே 2 முறை 300 ரன்களை கடந்துள்ளனர். இன்றைய போட்டியில் 300 ரன் அடித்ததன் மூலம் இப்பட்டியலில் 3-வது வீரராக சேவாக் இடம் பிடித்துள்ளார்.

போலீஸ் துரத்தல்.. கார் சேஸ்.. தப்பிய சீமான்!


நெல்லை: தன்னைக் கைது செய்ய காத்திருந்த போலீசாரிடம் இருந்து தப்பிய சீமான், காரில் ஏறிப் பறந்தார். அவரது காரை போலீசார் விரட்டிச் சென்று மடக்கியபோது அதில் சீமான் இல்லை. போலீசாரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு மாயமாகிவிட்டார்.

புதுச்சேரியில் நடந்த ஈழத் தமிழர்கள் ஆதரவு கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதாக இயக்குனர் சீமான் மீது புதுச்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்ய முயன்று வருகின்றனர்.

ஆனால், அவர்களிடம் சிக்காமல் சாதுர்யமாக தப்பி வரும் சீமான் நெல்லை வக்கீல்கள் சங்கம் சார்பில் ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் நேற்றிரவு நடந்த கூட்டத்தில் கலந்து கொள்ள ரகசியமாக நெல்லை வந்தார்.

அவர் எங்கு இருக்கிறார் என்று தமிழக போலீசே கண்டுபிடிக்க முடியாதபடி அவரது இருப்பிடம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

கூட்டம் தொடங்கும் வரை சீமான் வருவாரா என்பதே சந்தேகமாக இருந்தது. ஆனால், குறிப்பிட்டபடி வக்கீல்கள் புடைசூழ பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார் சீமான்.

இது குறித்து தமிழக போலீசார் புதுச்சேரி போலீசாருக்கு தகவல் தரவே அவர்கள் சீமானை கைது செய்ய நெல்லை போலீசாரின் உதவியை கேட்டனர். இதையடுத்து பொதுக் கூட்டம் முடிந்ததும் அவரை கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர்.

இதற்காக பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதி முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். கூட்டம் நடத்தி முடிக்க இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அதையும் கடந்து 10.30 மணிக்கு பிறகும் கூட்டம் தொடர்ந்தது. இதனால் கூட்டத்தை உடனே முடிக்கச் சொல்லி வழக்கற்ஞர்களை போலீசார் நெருக்கினர்.

ஆனால், கூட்டம் முடிந்ததும் சீமானை கைது செய்ய போலீசார் திட்டமிட்டிருப்பதை அறிந்த வழக்கறிஞர்கள் சீமானை தப்பவைக்க முடிவு செய்தனர்.

பொதுக்கூட்ட மேடை அருகே 3 கார்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டன. கூட்டம் முடிந்ததும் வக்கீல்கள் மேடையை சுற்றி நின்று கொண்டனர். போலீசார் மேடைக்கு வர முடியாதபடி தடுப்பை ஏற்படுத்தினர்.

டைரக்டர் சீமான் காரில் ஏறியதும் 3 கார்களும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து கிளம்பிவிட்டன. இதில் சீமான் எந்தக் காரில் ஏறினார் என்பதைக் கூட போலீசார் பார்க்க முடியவில்லை.

இதை எதிர்பாராத போலீசார் சுதாரித்துக் கொண்டு 3 கார்களையும் 'சேஸ்' செய்தனர்.
ஆனால், பாளை பஸ் நிலையம், அங்கிருந்து புது பஸ் நிலையம், பைபாஸ் ரோடு, வண்ணார்பேட்டை, டவுன் என்று சென்ற அந்த கார்கள் குற்றாலம் ரோட்டில் சென்றவுடன் தனித்தனியாக பிரிந்து ஒவ்வொரு காரும் வெவ்வேறு திசையில் சென்றன.

இதில் தடுமாறிய போலீசார் ஒரு காரை பின் தொடர்ந்து குற்றாலம் வரை சென்றனர். மற்ற கார்களைப் பற்றி செக் போஸ்டுகளுக்கு தகவல் கொடுத்தனர். குற்றாலம் சென்ற காரை போலீசார் மடக்கி சோதனையிட்டபோது அதில் சீமான் இல்லை.

அதே போல மற்ற இரு கார்களையும் போலீஸ் சோதனைச் சாவடிகளில் சோதனையிட்டபோது அவற்றிலும் சீமான் இல்லை. அவர் வழியிலேயே வேறு காருக்கு மாறி எங்கோ போய்விட்டார்.

இந்தக் கூத்து நள்ளிரவு 3 மணி வரை நடந்தது.

Obama & Rajini pics - ஒபாமா & ரஜினி சென்னையை கலக்கும் ‘அரசன்’ போஸ்டர்கள்

சென்னையின் இன்றைய பரபரப்பு ‘அரசன்’ பட போஸ்டர்கள் தான். சென்னை நகர் முழுக்க ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் தான் இப்போது நம் ரசிகர்கள் மற்றும் கலூரி மாணவர்களின் ஹாட் டாபிக்.
மேற்கூறிய போஸ்டர் அநேகமாக சூப்பர் ஸ்டார் நடித்த ஏதாவது ஒரு ஹிந்தி படத்தின் தமிழாக்கத்தின் போஸ்டராகத்தன் இருக்கும் என்பதில் ஐயமில்லை. போஸ்டரில் காணப்படும் வாசகங்கள் “Black Man - Big History” என்பதற்கு ஏற்ப அமெரிக்க அதிபர் ஒபாமாவின் படமும் சூப்பர் ஸ்டாரின் படமும் இருபுறமும் காணப்படுகிறது. இருவரும் அடிப்படையில் கருப்பு நிறம் என்பதை இது குறிக்கிறது.

சும்மா பரபரப்புக்காக ஒபாமாவின் படம் சேர்க்கப்பட்டு அச்சிடப்பட்டுள்ளது. மற்றபடி மேற்படி டப்பிங் படத்திற்கும் ஒபாமாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரும் கருப்பு நம் தலைவரும் கருப்பு என்பது சௌகரியமான ஒற்றுமையாய் போய்விட்டது அவ்வளவுதான். இருவரும் தத்தங்கள் துறையில் சாதித்தவர்கள் என்பது கூடுதல் சிறப்பு. அதுமட்டுமல்லாது, “இன்று வேட்டை, நாளை கோட்டை” என்ற பன்ச் டயலாக் வேறு சும்மா மிரட்டுகிறது. அதற்க்கு கீழே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எங்கள் ‘அரசன்’ -The Don என்று காணப்படுகின்றது. ஒரு டப்பிங் படத்தின் போஸ்டரே இவ்வளவு பரபரப்பு கிளப்புகிறது என்றால், அது நம் சூப்பர் ஸ்டார் ஒருவருக்காக மட்டுமே இருக்க முடியும். மற்றபடி இது சூப்பர் ஸ்டாரின் புதுப் படமோ அதன் விளம்பரமோ அல்ல. சும்மா ரசித்துவிட்டு போங்களேன்…




நன்றி - onlysuperstar.com

Kamal furious in madan's thirai parvai

virumandi kamal speaking

ரத்த வெறி


நினைத்தாலே உடல் நடுங்குகிறது. கண்ணைத் திறந்தாலும் சரி, மூடினாலும் சரி , அந்த சம்பவம் மறுபடி மறுபடி, மனதில் replay ஆகிறது. அழுது அழுது தமிழ் நாட்டின் காவிரி போல கண்கள் வற்றி விட்டன. இதே கண்களால் தானே என் உயிருக்கு உயிரான தம்பி உடல் நசுங்கி, ரத்தம் சிதறி சாவதைப் பார்த்தேன் .
என் முன்னாலேயே என் தம்பியை ஈவு இரக்கமின்றி கொன்ற ராஜசேகரை சும்மா விடக் கூடாது. இன்றிரவு எப்படியாவது அவனைப் பழி வாங்க வேண்டும். பழிக்குப் பழி ; ரத்தத்திற்கு ரத்தம் ! காலங்காலமாக எளியோரை வலியோர் நசுக்குவது தொடர்ந்து வருகிறது. எளியோர் என்றால் அவ்வளவு இளக்காரமா ?
சூரியன் மேற்கே transfer வாங்கி சென்று விட்டான். கும்மிருட்டு. எனக்குப் பழகியதால் நன்றாகவே வழி தெரிந்தது. ராஜசேகரின் வீடு ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் 4 வது மாடியில் உள்ளது. பணத்தை எப்படியெல்லாம் செலவழிப்பது என்று சிந்திக்கும் வர்க்கம் வசிக்கும் இடமென்பதால் பாதுகாப்பு எப்போதுமே கொஞ்சம் பலமாகத் தான் இருக்கும். அப்படியே அந்த வீட்டை சுற்றி சுற்றி வந்து நோட்டம் பார்த்தேன். வீட்டின் அனைத்து கதவுகளும், ஜன்னல்களும் பூட்டியிருந்தன . எப்படி உள்ளே நுழைவது என மண்டையை உடைத்து கொண்டிருந்த போது, சற்றே திறந்திருந்த பால்கனிக் கதவு கண்ணில் பட்டது. கடவுளுக்கு ஒரு மானசீக நன்றியை சொல்லி விட்டு, அந்த நான்காம் மாடியை அடைவதற்குள் நாக்கு-அவுட் ஆகிவிட்டது. படுபாவி இவ்வளவு உயரத்திலா விட்டைக் கட்டி வைப்பான்?
பால்கனி விளிம்பில் அமர்ந்தவாறே உள்ளே பார்வையை மேய விட்டேன். சோபாவில் சாய்ந்தபடி ராஜசேகர் ஒரு தட்டு நிறைய எதோ தின்பண்டங்களை வைத்து கொறித்து கொண்டிருந்தான். என் வெறியோடு , பசியும் கை கோர்த்துக் கொள்ள, கொல்லப்பட்ட என் தம்பியை ஒரு முறை மனதில் நினைத்துக் கொண்டு, காரியத்தில் இறங்கினேன். தம்பியை நினைக்க நினைக்க என் ரத்த வெறி மீட்டர் வட்டி போல பன்மடங்கானது.
இதோ ராஜசேகரை நெருங்கி விட்டேன். இன்று எப்படியும் ரத்தம் பார்க்காமல் திரும்பப் போவதில்லை. ...
.... ஆ ... திடீரென்று இருட்டிக் கொண்டு வருகிறதே !....
.... என்னால் மூச்சு விட முடிய வில்லை !
.... தலை வேறு சுற்றுகிறது !...
ஈனஸ்வரத்தில் கடைசியாய் என் வாய் முனகிய வார்த்தைகள்
.... " யாராவது அந்த கொசு வர்த்திச் சுருளை அணையுங்களேன் ..."

The One & Only Kamal

Kamahasans un seen photos

இதய அஞ்சலி


திரைவானிலிருந்து மறைந்து நம்மையெல்லாம் கண்ணீர் வடிக்கச்செய்துள்ள அந்த "நகைச்சுவை" மன்னர் நாகேஷ் அவர்களுக்கு இதய அஞ்சலி!

எச்1பி விசா: யுஎஸ் சட்டம் என்ன தான் சொல்கிறது?

வாஷிங்டன்: ஒபாமா அரசிடம் நிதி உதவி (பெயில் அவுட்) பெறும் நிறுவனங்கள் இனி எச் 1 பி விசாவில் வெளிநாட்டிலிருந்து பணியாளர்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது என நிர்பந்திக்கப்படுவதாக சில தினங்களாக பரபரத்துக் கொண்டிருக்கின்றன மீடியாக்கள் (நாம் உள்பட).இதனால் அமெரிக்க வேலை குறித்த கனவுகளோடு காத்திருப்பவர்களுக்கு பலவித குழப்பங்கள் தோன்றியுள்ளன. இனி இந்த நிறுவனங்கள் எச் 1 பி விசாவில் வெளிநாட்டு ஊழியர்களை சேர்க்கவே முடியாதா?.அமெரிக்க மீட்பு மற்றும் மறுமுதலீட்டு சட்டத்தின் படி (இதான் ஒபாமாவின் பெயில் அவுட் சட்டத்துக்கு பேர்) எச்1பி விசா, கிரீன் கார்டுகள் குறித்த அமெரிக்க அரசின் நிலை என்ன?இது குறித்து அமெரிக்காவின் முன்னணி இமிக்ரேசன் வழக்கறிஞரான ராஜிவ் எஸ் கண்ணா அளித்துள்ள விளக்கம் அமெரிக்க கனவுகளுடன் காத்திருப்போரின் கவலைகளை போக்குவதாக அமைந்துள்ளது. அவர் தந்துள்ள விளக்கத்தின்படி எச்1பி விஷயத்தில் இந்த சட்டத்தில் 4 நிபந்தனைகள் போடப்பட்டுள்ளன. அதன் விவரம்:நிபந்தனை 1: அமெரிக்க அரசிடம் நிதிச் சலுகை பெரும் நிறுவனமானது சில நிபந்தனைகளின் அடிப்படையில் எச் 1 பி விசாவில் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தலாம். அதே நேரத்தில் இப்போது பணியில் உள்ள எச் 1 பி விசா பணியாளர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது. இவர்களின் க்ரீன் கார்டுக்கோ அல்லது அதற்காக அவர்கள் அனுப்பியுள்ள விண்ணப்பத்துக்கோ எந்த பாதிப்பும் வரக்கூடாது.நிபந்தனை 2: இந்த எச்1 பி விசா பணியாளர்களை நம்பியுள்ள நிறுவனங்களுக்கு, அந்த பணியாளர்களின் தேவை எப்போதும் உள்ளதாகவே அர்த்தம். இத்தகைய நிறுவனங்கள் எச்1 பி விசா பணியாளர்களை நம்பியிருப்பவை என வகைப்படுத்தப்படும்.நிபந்தனை 3: நிதிச் சலுகை பெறும் நிறுவனங்கள் இனி கூடுதலாக பின்பற்ற வேண்டிய நிபந்தனை:தற்போது பணியில் உள்ள ஒரு அமெரிக்கப் பணியாளரை நீக்கும்போது, அந்த இடத்தில் எச் 1பி விசா பணியாளரை அமர்த்தக்கூடாது. மீண்டும் ஒரு அமெரிக்கரை மட்டுமே அந்த இடத்துக்கு அமர்த்த வேண்டும். அப்படி ஒரு அமெரிக்கப் பணியாளர் வரும்வரை பொறுத்திருக்கலாம்.நிபந்தனை 4: விதிவிலக்காக சில நேரங்களில் வெளிநாட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்த வேண்டி வரலாம். அப்படி நியமிக்கப்படும் எச்1பி விசா பணியாளர் உயர் பட்டம் பெற்றிருப்பவராக இருக்க வேண்டும் அல்லது ஆண்டுக்கு 60 ஆயிரம் டாலருக்கு மேல் சம்பளம் பெறுபவராக இருக்க வேண்டும். பொதுவாக இந்த மாதிரி சிறப்பு பணியாளர்களுக்கு, அமெரிக்காவின் புதிய எச் 1பி விசா நிபந்தனைகள் பொருந்தாது.

கமல்ஹாசன் - தசாவதாரம் [ அவதாரங்கள் ]