Wednesday, March 11, 2009

இணைய மக்கள் தொகை 100 கோடியை தாண்டியது

சென்ற டிசம்பர் மாதம் 2008 கணக்குப்படி உலகில் இணையத்தை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 100 கோடியை தாண்டியது. Comscore நிறுவனத்தின் குறிப்பின் படி ஒவ்வொரு நாட்டின் இணைய உபயோகிப்பாளர்கள் எண்ணிக்கை இது.

சீனா 179.7 மில்லியன்
அமெரிக்கா 163.3 மில்லியன்
ஜப்பான் 60 மில்லியன்
ஜெர்மனி 37 மில்லியன்
இங்கிலாந்து 36.7 மில்லியன்
பிரான்ஸ் 34 மில்லியன்
இந்தியா 32.1 மில்லியன்
ரஷ்யா 29 மில்லியன்
பிரேசில் 27.7 மில்லியன்
சவுத் கொரியா 27.3 மில்லியன்
கனடா 21.8 மில்லியன்
இத்தாலி 20.8 மில்லியன்
ஸ்பெயின் 17.9 மில்லியன்
மெக்சிகோ 12.5 மில்லியன்
நெதர்லாண்ட்ஸ் 11.8 மில்லியன்

ஆக உலகில் 15 முதல் 22 சதவிகித மக்களே இணையத்தை உபயோகிக்கின்றனர்.மேலும் எந்த இணையதளங்கள் அதிகம் பார்வையிடப்பட்டது என்ற தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.http://www.comscore.com/press/release.asp?press=2698

இயக்குநர் பாலா மன்னிப்பு கேட்க வேண்டும்!

"இயக்குநர் பாலா மன்னிப்பு கேட்க வேண்டும்! ஊனமுற்றோர் நல வாரியம்"
நான் கடவுள் படத்தில் ஊனமுற்றோரை இயக்குநர் பாலா அவமானப்படுத்திவிட்டதாகக் கூறி, அவர் மீது வழக்குத் தொடர தயாராகி வருகிறது தமிழ்நாடு ஊனமுற்றோர் நல வாரியம்.

தமிழ் இயக்குநர்களில் பெரும் நம்பிக்கைக்குரிய இயக்குநராகத் திகழ்பவர் பாலா. திரைப்படத்துறைக்கு வந்து 10 ஆண்டுகளில் 4 படங்கள் மட்டுமே கொடுத்தாலும், நான்குமே தமிழ் சினிமாவை வேறு தளத்துக்கு அழைத்துச் செல்லும் விதத்தில் அமைந்தன.

பாலா இயக்கத்தில் கடைசியாக வந்த படம் நான் கடவுள். இதில் அகோரிகள், பிச்சைக்காரர்கள், உடன் ஊனமுற்றோர் போன்ற உலகின் ஒதுக்கப்பட்ட மனிதர்களின் உலகைப் படம்பிடித்திருந்தார் பாலா.

வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்தப் படத்துக்கும் இப்போது எதிர்ப்புக் குரல்கள்.

இந்தப் படத்தில் கண் பார்வையற்ற ஒரு பெண்ணை குருடி என விளிப்பது போல காட்சிகள் அமைத்தும், ஊனமுற்றவர்களை கொடூர சித்திரவதைகளுக்கு உட்படுத்துவது போல காட்டியும் அந்த சமூகத்தினரின் மன உறுதியைக் குலைத்துவிட்டாராம் பாலா. இதற்காக பாலா மன்னிப்புக் கேட்க வேண்டும், அத்தகைய காட்சிகளை நீக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் வழக்குப் போடுவோம் என்றும் தமிழ்நாடு ஊனமுற்றோர் நல வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த வாரி்யத்தின் உறுப்பினர் என்ஜினீயர் கோபிநாத், ஊனமுற்றோர் சமூக சேவை நிர்வாகிகள் ரமேஷ், வைரமணி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த நான் கடவுள் திரைப்படத்தில் உடல் ஊனமுற்றோரை பிச்சைக்காரர்களாகவும் கண்பார்வையற்ற பெண்ணை குருடி என விளிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் உடல் ஊனமுற்றோர், கண் பார்வையற்றோர், வாய் பேச இயலாதோரை வில்லன் நடிகர் துன்புறுத்தி அடித்து, உதைத்து பிச்சை எடுக்க வைப்பது போல காட்சிகள் அமைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.

பார்வையற்ற பெண் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை பூஜாவிற்கு இழைக்கப்படும் கொடுமைகளை தாங்க முடியாமல் அவரே தன் உயிரை எடுப்பதென்பது ஊனமுற்ற சமுதாயத்தினருக்கு தவறான தகவலாகவும், ஒத்து கொள்ள முடியாத ஒன்றாகவும் உள்ளது.

உடல் ஊனமுற்றோர், கண் பார்வையற்றோர் தன்னம்பிக்கையுடன் உழைத்து பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் காலத்தில், ஊனமுற்றோரை இழிவுப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள நான் கடவுள் படத்தின் காட்சிகளையும், வசனங்களையும் நீக்க வேண்டும். இயக்குனர் பாலா மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் நீதிமன்றத்தை அணுகுவதை தவிர வேறு வழியில்லை, என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

காங்கிரசுக்கு அதிக தொகுதிகள்: பணிகிறது திமுக‍!

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இம்முறை அதிக சீட் வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மேலும் தேமுதிகவுடன் கூட்டணி என்பதில் காங்கிரஸ் பிடிவாதமாக இருப்பதால் தேமுதிகவுக்கும் சேர்ந்து கூடுதலாக 5 தொகுதிகளை திமுகவிடம் காங்கிரஸ் பெற்றாக வேண்டும்.
காங்கிரஸின் இந்தக் கோரிக்கைக்கு இம்முறை பணிவதைத் தவிர திமுகவுக்கு வேறு வழியில்லை. எனவே 15 தொகுதிகளுக்குக் குறையாமல் அக்கட்சிக்கு திமுக ஒதுக்கிவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விவகாரங்களையெல்லாம் கூட்டத்தில் விவாதித்துள்ளனர். சம்பந்தப்பட்ட மாநிலங்களின் மேலிடப் பார்வையாளர்களும் இதில் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இன்று அல்லது நாளை கூட்டணி குறித்த இறுதி முடிவுகளை காங்கிரஸ் அறிவிக்கும்.

உலகின் முதல் ATM இயந்திரம்

எந்த நேரத்திலும் பணம் எடுத்து கொள்ளவும்,வங்கி பரிவர்த்தனைகள் செய்யவும் இன்று ATM களின் பங்கு அன்றாட வாழ்வில் முக்கியமானது.நகரங்களில் மட்டுமன்றி சிறிய ஊர்களிலும் ATM கள் புழக்கத்திற்கு வந்து வங்கிகளுக்கு அருகே மட்டுமின்றி வணிக அங்காடிகள்,ரயில்,விமான நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் புழங்கும் இடங்களிலும் வந்து இன்று அன்டார்டிகாவிலும் ஒரே ஒரு ATM இருக்கிறது.உலகின் தென்கோடி ATM இதுவே ஆகும்.
ATM கண்டுபிடித்த ஜான் ஷெபர்ட் பாரன்

உலகின் முதல் ATM பார்க்லேஸ்(Barclays) வங்கியால் 1967 ஆம் ஆண்டு வடக்கு லண்டனில் உள்ள என்பீல்ட் டவுன்(Enfield Town) என்னுமிடத்தில் அமைக்கப்பட்டது.ஜான் ஷெபர்ட் பாரன்(John Sheperd Barron) கண்டுபிடித்த ATM இயந்திரத்தை பற்றி அவர் கூறும் போது,காசு போட்டால் சாக்லேட் தரும் இயந்திரத்தின் இயங்குமுறையை அடிப்படையாக கொண்டே ATM இயந்திரத்தை கண்டுபிடித்ததாக கூறுகிறார்.அப்போதே PIN எண்ணை உள்ளீடும் முறை கண்டுபிடிக்கப்பட்டு விட்டது.முதலில் ஆறு எண்களை கொண்டு PIN எண்ணை உபயோகிக்கலாம் என நினைத்த அவர் மனைவி நான்கு எண்களுக்கு மேல் தன்னால் நினைவில் வைத்து கொள்ளமுடியாது என சொன்னதால் ஷெபர்ட் நான்கு எண்களை ATM இயந்திரத்திற்கு PIN எண்ணாக வைத்தார்.அதுவே இன்று உலக அளவில் எல்லா ATM இயந்திரங்களிலும் உபயோகப்படுத்தப்படுகிறது.

ரெக் வார்னி முதன் முதலாக ATM மூலம் பணம் எடுக்கும்போதுமுதல் முதலில் ATM இயந்திரத்தை உபயோகப்படுத்தி பணம் எடுத்தவர் இங்கிலாந்து தொலைக்காட்சி நாடக நடிகர் ரெக் வார்னி(Reg Varney).ஒரு முறை உபயோகித்தால், ஒரு 10 பவுண்ட் நோட்டை மட்டுமே மெல்லிய காகித பையில் வைத்து கொடுத்தது இந்த முதல் ATM இயந்திரம்.

Bombay 100 Years Back/Vintage Mumbai - Part2
















Bombay 100 Years Back/Vintage Mumbai - Part1
















Tendulkar and Bhajji with NSG Commandos











Monday, March 9, 2009

Sexy Shot !........


Two dancers celebrate another boundary in Trinidad, West Indies v England, 5th Test, Trinidad, March 8, 2009

தெண்டுல்கர் 43-வது சதம்

நியூசிலாந்துக்கு எதிராக இன்று நடந்த 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தெண்டுல்கர் மிகவும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 101 பந்துகளில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் அவர் 100 ரன்னை தொட்டார்.
425-வது ஒருநாள் போட்டியில் விளையாடும் தெண்டுல்கருக்கு இது 43-வது “சதம்” ஆகும். ஒரு ஆண்டு இடைவெளிக்கு பிறகு அவர் செஞ்சூரி அடித்தார். கடைசியாக கடந்த ஆண்டு மார்ச் 2-ந்தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னி மைதானத்தில் 117 ரன் எடுத்தார். அதன்பிறகு அவர் 8 ஆட்டங்கள் மட்டுமே விளையாடி இருக்கிறார். டெஸ்ட் போட்டியில் தெண்டுல்கர் 41 சதம் அடித்துள்ளார். டெஸ்ட்டிலும், ஒருநாள் போட்டியிலும் அதிக சதம் அடித்த சாதனை வீரராக அவர் உள்ளார்.

இதேபோல யுவராஜ்சிங் ஆட்டமும் இன்று அதிரடியாக இருந்தது. அவர் 60 பந்தில் 87 ரன் (10 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தார்.

என்ன கொடுமை சார் இது


Vijaya Tendulkar !..................


Priyamani in Bikni - Really Hot !...




அவுட்சோர்ஸிங் நாடுகளில் இந்தியா தொடர்ந்து முன்னணியில் இருக்கும் - மூடீஸ்

டெல்லி: அவுட்சோர்ஸிங் செய்ய சிறந்த நாடுகள் வரிசையில் இந்தியா தொடர்ந்து முன்னணியில் இருக்கும் என அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நிதி நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது.அவுட்சோர்சிங் செய்ய இந்தியா தான் சிறந்த இடம். குறைந்த விலையில் இங்கு கிடைக்கும் சேவைகள் வேறு எங்கும் கிடைக்காது. எனவே என்னதான் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் தொடர்ந்து இந்தியாவே முன்னணியில் இருக்கும் என மூடீஸ் தெரிவித்துள்ளது.சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா, தாக்கல் செய்த பட்ஜெட்டில், அவுட்சோர்ஸிங் செய்யும் நிறுவனங்களுக்கு வரி சலுகை கிடையாது என அறிவித்தார். இதனால், ஏற்கனவே உலக பொருளாதார வீழ்ச்சியால் சரிவை சந்தித்திருக்கும் இந்திய அவுட்சோர்ஸிங் நிறுவனங்கள் ஆட்டம் கண்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், அமெரிக்க நிறுவனங்கள் அவுட்சோர்ஸிங் செய்ய ஏற்ற இடம் இந்தியா தான் என்கிறது அமெரிக்காவின் நிதி முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றான மூடீஸ்.இது குறித்து அந்நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் ஷெர்மான் சான் கூறுகையில்,அவுட்சோர்ஸிங் செய்ய ஏற்ற நாடுகளில் இந்தியாவுக்கு தான் முதலிடம். இதற்கு இந்தியாவில் இருக்கும் தொழில்நுட்ப வல்லுனர்களும், ஆங்கில புலமை அதிகம் கொண்ட இளைஞர்களும் தான் காரணம்.இந்த வேலைகளை இதைவிட குறைந்த செலவில் மேற்கு ஐரோப்பாவில் செய்ய முடியாது.தற்போது உலக பொருளாதார நெருக்கடியால் இந்தியாவில் பிபிஓ துறை பின்னடைவை சந்தித்திருக்கும். இது விரைவில் மீண்டு வரும். தற்போது முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவதால் வளர்ச்சி வேகம் மெதுவாக தான் இருக்கும் என்றார் சான்.

இலங்கை: ரஜினி ரசிகர்கள் அமைதிப் போராட்டம்!


பெங்களூரு: ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கர்நாடக ரஜினி ரசிகர்கள் அமைதிப் போராட்டம் நடத்தினர்.இலங்கைப் பிரச்சினை முன்னெப்போதும் இல்லாத உச்ச கட்டத்தை அடைந்துள்ள நிலையில் தங்களையும் அதில் ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றனர் ரஜினி ரசிகர்கள். கர்நாடக மாநில ரஜினி சேவா சங்கத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் மகாத்மா காந்தி சாலையில் உள்ள காந்தி சிலை அருகே ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து அமைதிப் போராட்டம் நடத்தினர். ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலைக் கண்டித்தும், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தியும் பலர் பேசினார்கள். இந்த போராட்டத்தில் ரஜினி ரசிகர்களுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, உலகத் தமிழ் கழகம், அகில இந்திய மனித உரிமைக் கழகம், திராவிடர் கழகம், கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றவர்கள்.

Tallest Female in the World !...
















ஆந்திர தேர்தல் களத்தில் ஷகிலா!


சினிமா காட்சிகளையும் மிஞ்சும் வகையில் பல நேரங்களில் நிஜ காட்சிகள் அமைந்துவிடுகின்றன.
அதுவும் அரசியலில் கேட்கவே வேண்டாம்.
தூள் திரைப்படத்தில் கவர்ச்சி நடிகை ஷகிலாவை மையப்படுத்தி ஒரு காட்சியை அமைத்திருப்பார் இயக்குநர் தரணி. ஷகிலா படம் ஒன்றுக்கு அமைச்சர் நற்சாட்சிக் கடிதம் தருவது போலவும், அதனால் அவர் பதவியே பறிபோவது போலவும் அந்தக் காட்சி இருக்கும்.
ஆனால் நிஜத்தில் அதெல்லாம் ஜுஜுபி என்பது போல நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.
கவர்ச்சி குண்டு ஷகீலாவை தேர்தல் களமிறக்குகிறது சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி.ஆனால் அவர் வேட்பாளராக நிற்கவில்லை, தெலுங்கு தேசம் கட்சியின் ஸ்டார் பேச்சாளராக, பிரச்சாரகராக களமிறக்கப்பட்டுள்ளார்.
இந்த முறை வெறும் பிரச்சாரத்துக்கு வரும் அவர், அடுத்து வரும் தேர்தல்களில் வேட்பாளராகக் களமிறங்குவார் என கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.

கடந்த முறை தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக - திமுக என்னென்ன கூத்துக்களை அரங்கேற்றியதோ, அவை அனைத்தையும் இந்த முறை அரங்கேற்றி வருகிறது தெலுங்குதேசம்.
ஆந்திராவில் ஏகப்பட்ட நட்சத்திரங்களை ஒவ்வொரு கட்சியும் வலை வீசி இழுக்கத் தொடங்கி விட்டன.
காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சிகள் முக்கிய நட்சத்திரங்களை, மக்களை கவரக் கூடிய நட்சத்திரங்களை குறிப்பாக நடிகைகளை தங்களது பிரசார வட்டத்திற்குள் கொண்டு வர ஆரம்பித்துள்ளன.
தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் அணித் தலைவியான ரோஜா இதில் முன்னணியி்ல இருக்கிறார். அவரது பிரசார ஸ்டைல் ஏற்கனவே பெருத்த அலைகளைப் பரப்பியுள்ளது. திருச்சானூரில் போட்டியிடும் அவர், தெருச்சண்டை, குழாயடிச் சண்டை ரேஞ்சுக்கு இறங்கி அடித்துக் கொண்டிருக்கிறார்.
அதேபோல முன்னணி நட்சத்திரமான திரிஷாவும் காங்கிரசுக்கு பிரசாரம் செய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷகிலா-இளைஞர்களைக் கவரவாம்!!
இந்த நிலையில் தெலுங்கு தேசத்திற்காக வாக்கு சேகரிக்க கவர்ச்சிப் புயல் ஷகீலாவை அக்கட்சி இழுத்துள்ளது.
இளைஞர்களைக் கவரும் வகையில், அவர்களின் அபிமானத்தைப் பெற்ற (!!) முன்னணி நாயகி ஷகிலாவைக் களமிறக்குவதில் மகிழ்ச்சி அடைவதாக அக்கட்சி தெரிவி்த்துள்ளது.
தமிழ், மலையாளம், கன்னடம் என மூன்று தென்மாநில மக்களுக்கும் திரையில் ‘தரிசனம்’ தந்து வந்த ஷகிலா, ஆந்திர மக்களை நேரில் சென்று ஓட்டுக் கேட்டு அதிர்ச்சி தரப் போகிறாராம்.

வங்கக் கடலில் திடீர் புயல் சின்னம்-தென் மாவட்டங்களில் கன மழை

சென்னை: வங்கக் கடலில் திடீரென குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து காவிரி டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. சென்னையில் தூறல் காணப்படுகிறது.தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இரவு நேரங்களில் பனி கொட்டுகிறது. இந்த நிலையில், தென் மேற்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளது. இதையடுத்து இன்று காலை முதல் வானிலை அப்படியே தலைகீழாக மாறியது.காவிரி டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் காலை முதல் கன மழை பெய்து வருகிறது. நாகை, சீர்காழி, தஞ்சை, திருவாரூர், மன்னார் குடி உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளது.அதேபோல ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை பெய்துள்ளது.சென்னையில் காலை முதலே வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்படுகிறது. ஆங்காங்கு தூறல் மழை காணப்படுகிறது.இந்த நிலை மேலும் 24 மணி நேரத்திற்கு நீடிக்கும் எனவும், காவிரி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.