Thursday, July 30, 2009

தமிழ் திரட்டிகளின் தொகுப்பு பட்டன்


உங்கள் பதிவுகளை அல்லது இனைய பக்கத்தை அனைத்து தமிழ் திரட்டிகளிலும் வெளியிட ஒரு பட்டன் மட்டுமே போதும். தற்போது FindIndia.net என்ற இணையத்தளம் இந்த சேவையை வழங்குகிறது . இந்த பட்டனை முற்றிலும் இலவசமாக நாம் நம் பிளாக்கர் ப்ளாகிலோ அல்லது நமது இணையத்தளத்தில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம் ( எனது ப்ளாகின் Sidbarல் காண்க). இதன் மூலம் அதிக பார்வையாளர்களை நம் தளத்திற்கு வர செய்யலாம்.

தற்போது BETA பதிப்பில் உள்ள இத்தளம் தற்போது தமிழ் , இந்திய ஆங்கில Social Bookmarking தளங்களுக்கு பதிவுகளை submit செய்வதற்கான பட்டங்களை வழங்குகிறது. இது தமிளிஷ், தமிழ்மணம், தமிழர்ஸ் என்று பல பட்டன்கள் நம் தளத்தில் add செய்வதற்கு ஒரு buttonlaye எல்லா திரட்டிகளிலும் பதிவுகளை submit செய்ய எளியதாக இருக்கும் .

உங்கள் பட்டன் பெறுவதற்கு இங்கு கிளிக் செய்யவும்.

Friday, March 27, 2009

ரயில்வே கேட் அடைப்பு - தாய், சேய் பலி

தென்காசி: பிரசவத்தின் போது வலிப்பு ஏற்பட்டதை அடுத்து நெல்லை மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு செல்லும் வழியில் ரயில்வே கேட் அடைக்கப்பட்டதால் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அனந்தபுரத்தை சேர்ந்த முருகன். இவரது மனைவி
கண்ணம்மாள் . இந்நிலையில் நேற்று கண்ணம்மாளுக்கு பிரவச வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை வடகரையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

அங்கு கண்ணாம்மாளுக்கு ஆண் குழந்தை இறந்தே பிறந்தது. இந்நிலையில் தாய்க்கும் திடீரென வலிப்பு ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் நெல்லை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அவர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியில் ரயில்வே கேட் அடைக்கப்பட்டிருந்ததால் உரிய நேரத்தில் நெல்லை செல்ல முடியவில்லை.

இந்நிலையில் வலிப்பு அதிகமானதை தொடர்ந்து கண்ணம்மாள் பாதி வழியில் இறந்தார். இதையடுத்து அவரது உடல் அதே ஆம்புலன்சில் தென்காசி அரசு மருத்துவமனைக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டது.

மருத்துவமனை நிர்வாகத்தின் தாமதம் மற்றும் ரயில்வே கேட் அடைக்கப்பட்டிருந்ததால் தான் கண்ணம்மாளை காப்பாற்ற முடியாமல் போய்வி்ட்டது என்று கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்துவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் தென்காசி இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் அன்பு, பிரகாஷ் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து உறவினர்கள் சமாதானமடைந்து உடலை வாங்கி சென்றனர்.


கண்ணம்மாள். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் தென்காசியை அடுத்த வடகரை உதயசெல்வன்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு பிரசவத்துக்காக வந்தார்.


source:http://thatstamil.oneindia.in/news/2009/03/27/tn-railway-gate-closed-mother-succumbed-to-post.html

இதயத்தின் பாதிப்பு !..


உன்னால்
ஏற்படும் பாதிப்பு
மிகவும் விநோதமானது !..

இதயத்தில்
பாதிப்பு இல்லை !..
பாதிப்பில் தான் இதயமே !..
---------------------------------------------------------------------------------
அன்பே ...!!!
உன்மேல் நான்
பாசமா வைத்தேன்

இல்லை
என் உயிரை வைத்தேன்

அதனால் தானோ
என் இதயத்தில்
இரத்தக் கசிவு..!!

Thursday, March 26, 2009

முதலும் நீயே !... முடிவும் நீயே !....

அரசியலில் எதுவும் நடக்கலாம். என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம், எப்படி வேண்டுமானாலும் திட்டிக் கொள்ளளாம். எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானலும் கொள்கைளை வளைத்துக் கொள்ளலாம்.
1998.

2001

அதிமுக கூட்டணியிலிருந்து படு வேகமாக வெளியேறியது பாமக. அப்போது டாக்டர் ராமதாஸ் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை இது...

"டாக்டர் ராமதாஸ் ஒரு சந்தர்ப்பவாதி. தனது சொந்த நலன்ளுக்காக அவர் கூட்டணிகளை உருவாக்குவார், கூட்டணியிலிருந்து விலகுவார், கூட்டணிகளை உடைப்பார்"

2004

2004ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றது பாமக. இந்த முறை திமுகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து கழன்று வந்து காங்கிரஸ் அணியில் இணைந்தது.இந்தத் தேர்தலில் பாமகவுக்கு 6 எம்.பிக்கள் கிடைத்தனர். ராமதாஸின் மகன் டாக்டர் அன்புமணி மத்திய அமைச்சரானார்.


2006


2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவுடனான கூட்டணியைத் தொடர்ந்தார் டாக்டர் ராமதாஸ்.ஆனால் இந்தத் தேர்தலில் 34 இடங்களில் போட்டியிட்ட பாமகவுக்கு 18 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. கடந்த தேர்தலை விட இது 2 இடங்கள் குறைவாகும்.

2008
2008ம் ஆண்டில் திமுகவுடன் கூட்டணி முறிந்தது. திருமங்கலம் இடைத் தேர்தலில் பாமக எந்த நிலையையும் வகிக்காமல் அமைதியாக இருந்து விட்டது.
2009
2009 லோக்சபா தேர்தலில் மீண்டும் ஒருமுறை அணி மாறியுள்ளது பாமக. இந்த முறை அதிமுக தலைமையிலான தமிழக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது

இனி இவர்களின் நிலைமை

இவர்களை நம்பி இருக்கும் மக்களின் நிலைமை ...........
????????????????????????????????????????????????



Friday, March 20, 2009

புலிகளுக்கு சமர்ப்பணம் - சச்சின் !..

புலிகள் பாதுகாப்பு குறித்து நான் ஏற்கனவே ஓர் அறிவிப்பு கொடுத்துள்ளேன் .நூறு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் 40,000 புலிகள் இருந்தன . அனால் இப்பொழுது 1,700 புலிகள் மட்டுமே உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .மாதத்திற்கு ஒரு புலி வேட்டையாட படுகிறது . நான் சிறுவனாக இருந்த பொழுது டினோசர் என்ற ஒரு மிருகம் இருந்தது ஆனால் தற்பொழுது இல்லை. அந்த நிலை புலிகளுக்கும் வந்து விட கூடாது .

நியூசீலாந்துக்கு எதிரான தனது சதத்தை புலிகளுக்கு சமர்ப்பணம் செய்வதாக சச்சின் டெண்டுல்கர் கூறினார்.

Monday, March 16, 2009

கவிதை வந்த காரணம் ?.


எத்தனைநாள்
பேனாவுடன் கண்விழித்தும்
வாராத கவிதை ?

உண் கடைக்கண்பார்வையில்
காட்டாறாய் உடைத்ததென்று
!..

அட்ரா சக்கை !.. அட்ரா சக்கை !.. அட்ரா சக்கை !..

வில்லு ஒடிந்த சோகம்… விஜய்க்கு வந்த கோபம்!

விஜய்க்கும் அவரது தந்தைக்கும் கோபம் வந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பது சில பத்திரிகையாளர்கள் அனுபவப்பூர்வமாக அறிந்த ஒன்று.


எதற்காக விஜய்க்குக் கோபம் வரும்?
அது ஒரு பெரிய கதை… சின்னதாகச் சொல்ல முயற்சிக்கிறோம்.
அப்போது குமுதம் வார இதழின் ஆசிரியராக அமரர் சுஜாதா பொறுப்பு வகித்தார்.
விஜய் நடிக்க, அவர் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் இயக்கிய ‘ரசிகன்’ படம் வெளியாகியிருந்தது. அந்தப் படத்தின் விமர்சனம் குமுதத்தில் வெளியாகியிருந்தது.




படத்தையும் நாயகனையும் ஒரு காய்ச்சுக் காய்ச்சியிருந்தது குமுதம். சில இடங்களில் கொஞ்சம் ஓவராகவே காய்ச்சி விட்டார்கள். எப்படித் தெரியுமா?
“இவரெல்லாம் (விஜய்) ஒரு மூஞ்சி என்று காசு கொடுத்து படம் பார்க்க வேண்டிய தலை எழுத்து தமிழ் ரசிகனுக்கு…!” என்கிற ரீதியில்…

அவ்வளவுதான்… இதழ் வெளியான அடுத்த நாள் ஆட்டோக்களில் தனது தொண்டரடிப் பொடிகளுடன் குமுதம் அலுவலகம் முன்னாள் போய் இறங்கி, புரசைவாக்கமே அதிரும்படி எஸ்ஏசி ‘வூடு கட்ட’… அடுத்த இதழில் இப்படி எழுதியிருந்தது குமுதம்:

“இளைய தளபதி விஜய் ஒரு அழகான நடிகர். இளம் நாயகர்களில் அவரைப் போன்ற அழகும் நடிப்புத் திறமையும் உள்ளவர்கள் அரிது. அவரைப் பற்றி கடந்த இதழ் ரசிகன் விமர்சனத்தில் இடம்பெற்ற கருத்துக்களுக்கு வருந்துகிறோம்…”

இன்னொரு சமயம்…

விஜய்யின் கோபம் ஒரு பிரபல மாலை நாளிதழின் நிருபரையே வேலையை விட்டுத் துரத்தும் அளவுக்குப் போனது.

மாநிலத்தின் நம்பர் ஒன் நாளிதழின் சினிமா நிருபரைக் கூட, அனைத்துப் பத்திரிகையாளரும் கூடிய ஒரு சந்திப்பில் விரல் நீட்டி எச்சரித்து மிரட்டியவர் விஜய். சச்சின் படம் வெளியானபோது, கடுமையான விமர்சனம் செய்த தினமணி போன்ற முதல்நிலை நாளேடுகளின் நிருபர்கள்கூட மிரட்டப்பட்டனர்.

எதற்கு இவ்வளவு பலமான பீடிகை தெரியுமா… கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள். இதில் நீங்கள் ‘தரிசிப்பது’ சாட்சாத் அதே ‘இளையதளபதி’ விஜய்யைத் தான்!

சமீபத்தில் தனது வில்லு படத்தைத் தூக்கி நிறுத்த விஜய்யும், பிரபு தேவாவும் தமிழ்நாடு முழுக்க தியேட்டர் தியேட்டராக சுற்றுப்பயணம் செய்தார்கள் அல்லவா…

அப்போது நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது எடுத்த வீடியோ காட்சி இது. ஒரு நிருபர்,

‘எம்ஜிஆருடன் உங்களை ஒப்பிட்டுக் கொள்வது ரொம்ப ஓவரா தெரியலையா?’
என்பது போல ஒரு கிண்டலான கேள்வியைக் கேட்டு வைக்க… அதற்கு பதில் சொல்ல முயற்சித்த விஜய், அடக்க முடியாமல் ஆத்திரப்பட்டு, தனது ரசிகர்களைத் திட்டுவது போல, நிருபர்களை மறைமுகமாகத் திட்டும் காட்சி இது.

இத்தனைக்கும் ரசிகர்கள் யாரும் அந்த இடத்தில் இல்லை. அவர்களின் குரல் கூட கேட்கவில்லை. இதுவரை நடந்துள்ள விஜய் பிரஸ்மீடை அனைத்திலும் பங்கெடுத்துள்ளோம். எதிலும் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டதில்லை. கல்யாண மண்டபத்துக்கு வெளியில் கூட அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதைக் கவனிக்க.

விஜய் கோபத்தில் கத்தும்போது பிரபுதேவாவின் முக மாறுதல்களையும் கவனியுங்கள்!

குறிப்பு: விழா மேடைகளில் பரம சாதுவாய் காட்சி தரும் விஜய்யைக் கண்டவர்களுக்கு இது நிச்சயம் அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.

‘அட என்னய்யா இது… ஒரு மனுசனுக்கு கோபமே வராதா… இல்ல வரக்கூடாதா?’ என்று சிலர் கேட்கக் கூடும்.

எதனால் இந்த நிலை?

எம்ஜிஆர் அல்லது ரஜினி… இப்படி யாராவது ஒரு சூப்பர் ஸ்டாரின் நாற்காலிக்கு குறி வைப்பதால் வந்த அவமானத்தின் விளைவு இது. காதலுக்கு மரியாதை, லவ் டுடே, அட கில்லி வரை தன் பாணியில் தனக்கேற்ற கதைகளில் வெற்றிகளைப் பார்த்தவர்தானே விஜய்… அந்த ட்ராக்கை விட்டுவிட்டு அடுத்தவர் ட்ராக்கில் கண் வைத்தால் இடறத்தானே செய்யும்!

தி.மு.க.வில் சேர்கிறார் ராதாரவி!


‘உரிய மரியாதை இல்லை!’ - அதிமுகவிலிருந்து விலகும் ராதாரவி

சென்னை: அ.தி.மு.க.வில் தனக்கு உரிய மரியாதை தரப்படவில்லை என்றும், தி.மு.க.வில் விரைவில் இணைவேன் என்றும் நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்த பின் இதை நிருபர்களிடம் கூறினார் ராதாரவி.

நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராதாரவி நேற்று மாலை 5 மணிக்கு முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களுக்கு ராதாரவி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இந்த திடீர் சந்திப்புக்குக் காரணம் என்ன?
முதல்வர் கருணாநிதி உடல் நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் இருந்த போது பார்க்க முடியவில்லை. அதனால் இப்போது வந்து நலம் விசாரித்தேன். என்னுடைய தாயார் மறைந்த போது, அவருக்கு உடல்நிலை சரியில்லாத போது கூட என்னை போனில் தொடர்பு கொண்டு தூக்கம் விசாரித்த மனிதாபிமானம் மிக்கவர் அவர். அந்த அடிப்படையில் அவரை இன்று சந்தித்தேன்.

இது நீங்கள் தி.மு.க.வில் இணைவதற்கான முன்னோட்டமாக எடுத்துக்கொள்ளலாமா?
ஆமாம். அப்படி எடுத்துக்கொள்ளலாம்.

அ.தி.மு.க.வில் இருந்து திடீரென்று விலகக் காரணம்?
கடந்த பல மாதங்களாக அ.தி.மு.க.வில் புறக்கணிக்கப்பட்டு வருகிறேன். அ.தி.மு.க. மேடைகளில் என்னை பேச அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக தலைமை கழகத்திற்கு கடிதம் எழுதியும் பதில் இல்லை.

இது மட்டுமல்லாமல் என்னுடைய தாயார் இறந்த போது ஒப்புக்கு இரங்கல் தெரிவிக்கக் கூட ஜெயலலிதாவுக்கு மனமில்லை. எனது நெருங்கிய நண்பர் நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் கூட எனது தாயாருக்கு அஞ்சலி செலுத்த நேரில் வர முடியாத படி செய்து விட்டார்கள். இது போன்ற பல காரணங்களுக்காக அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற முடிவு செய்துவிட்டேன்.

அ.தி.மு.க.வில் உங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று கருதுகிறீர்களா?
தொண்டர்கள் கொடுத்தார்கள். தலைமை கொடுக்கவில்லை. அ.தி.மு.க.வில் தலைமைக்கு எடுத்து சொல்ல ஆள் இல்லை.

உங்களை போன்று வேறுயாரெல்லாம் அ.தி.மு.க.வில் இருந்து வெளியே வர இருக்கிறார்கள்?
அ.தி.மு.க.வில் தகுதியானவர்கள் ஓரம் கட்டப்படுகிறார்கள். அந்த அடிப்படையில் இன்னும் நிறைய பேர் அ.தி.மு.க.வில் இருந்து விலகுவார்கள்.

தி.மு.க.வில் எப்போது இணைவீர்கள்?
விரைவில் முறைப்படி இணைவேன்.

மக்களவைத் தேர்தலில் போட்டியிட திட்டமுள்ளதா?
நான் அ.தி.மு.க.வில் சேரும் போதே பதவியை எதிர்பார்த்து சேரவில்லை. அவர்களாகத்தான் சீட் கொடுத்தார்கள். இங்கேயும் அப்படித்தான். தேர்தலில் போட்டியிட உத்தரவிட்டால், போட்டியிடுவேன்.

தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா?
40 தொகுதிகளிலும் என் பிரச்சாரம் கண்டிப்பாக இருக்கும், என்றார் ராதாரவி.
ஏற்கெனவே திமுகவில் ‘பிரச்சார பீரங்கி’யாக இருந்தவர்தான் ராதாரவி. ஆனால் அப்போது அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், திமுகவில் உரிய மரியாதை இல்லை என்று கூறி அதிமுகவில் சேர்ந்தார். அவருக்கு உடனடியாக சைதை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பைக் கொடுத்து எம்எல்ஏ ஆக்கினார் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது. இவரைப் போலவே நடிகர் எஸ்எஸ் சந்திரனும் திமுகவிலிருந்து அதிமுகவுக்குப் போய் எம்பியானார். இப்போது அவரும் ராதாரவி வழியில் திமுகவுக்கு திரும்புவார் எனக் கூறப்படுகிறது.

அந்தரத்தில் சச்சின் !.......


கூட்டணி தர்மம் !...

இல.கனேசன்: வாங்க வாங்க சரத் என்ன தனியா வந்து இருக்கீங்க கூட யாரும் கட்சி நிர்வாகிகள் யாரும் வரவில்லையா?

சரத்: இல்லீங்க ராதிகா அரசி ஷூட்டிங் போய் இருக்காங்க!

இல.கனேசன்: எங்க கட்சி தொகுதி பங்கீட்டு விசயமாக பேச இருவர் கொண்ட கமிட்டி ஒன்றை அமைத்து இருக்கிறது, அதில் நானும் திருநாவுகரசும் இருக்கிறோம்!

சரத்: (மனசுக்குள் ஆள் இல்லாத கடையிலும் பொருப்பா டீ ஆத்துவீங்க போல) எங்கேங்க அவர் இல்லையா?

இல.கனேசன்: இல்லீங்க அவரு வேறு ஏதும் கட்சிக்கூட பேச முடியுமான்னு பார்க்க போய் இருக்கிறார்.

சரத்:சரி நேரா மேட்டருக்கு வருவோம்!

இல.கனேசன்: இருக்கிறது 40 தொகுதி, இதை எப்படி பிரிச்சுக்கிறது!

சரத்: எனக்கு 2 தொகுதி கொடுத்துவிடுங்க மீதி 38ல் நீங்க நின்னுக்குங்க!

இல.கனேசன்: அய் அய்! எங்களுக்கு 2 போதும் மீதி 38ல் நீங்க நின்னுக்குங்க!

சரத்: அதெல்லாம் முடியாதுங்க இதுவரை எங்க கட்சியில் இருப்பது நானும் என் மனைவி ராதிகாவும் தான் இரண்டு பேருக்கு இரண்டு சீட் போதும்!

இல.கனேசன்: அதெல்லாம் முடியாதுங்க உங்க மனைவி நடிக்கும் தொடரில் இருப்பவர்களுக்கு ஆளுக்கு ஒரு சீட் கொடுத்தாலே நீங்க ஈசியா 38 சீட்டுக்குஆள் புடிச்சுடலாம்! எங்களால அது முடியாது!

சரத்: அட நீங்க வேற இன்னைக்கு அரசி தொடரை இயக்குரவங்க நாளைக்கு இருப்பாங்களான்னு டவுட்டா இருக்கு இதுல நீங்க சீட்டை அவுங்களுக்கு கொடுக்க சொன்னா,அதெல்லாம் சரி வராதுங்க, என் கட்சிக்கு 2 சீட் போதும், மீதிய நீங்க வெச்சுக்குங்க!

இல.கனேசன்: அதெல்லாம் முடியாதுங்க எங்க கட்சிக்கு 2 சீட் போதும் மீதிய நீங்கதான் வெச்சுகனும்...

சரத்: இல்லீங்க அதெல்லாம் சரி வராது...கூட்டணி பேச்சு வார்த்தை தொகுதி பங்கிட்டினால் முறிந்தது என்று ரிப்போட்டருக்கு சொல்லிடுங்க!எங்களுக்கு என்று ஒரு சுயமரியாதை இருக்கு, எங்களுக்கு யார் சரியாக இரண்டு சீட் தருகிறார்களோ அவர்களோடுதான் நாங்கள் கூட்டணி! இல்லையேல் இரு தொகுதியில் மட்டும் நாங்களே போட்டி இடுவோம்!

நன்றி : ஜூனியர் விகடன் , குசும்பன்

Wednesday, March 11, 2009

இணைய மக்கள் தொகை 100 கோடியை தாண்டியது

சென்ற டிசம்பர் மாதம் 2008 கணக்குப்படி உலகில் இணையத்தை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 100 கோடியை தாண்டியது. Comscore நிறுவனத்தின் குறிப்பின் படி ஒவ்வொரு நாட்டின் இணைய உபயோகிப்பாளர்கள் எண்ணிக்கை இது.

சீனா 179.7 மில்லியன்
அமெரிக்கா 163.3 மில்லியன்
ஜப்பான் 60 மில்லியன்
ஜெர்மனி 37 மில்லியன்
இங்கிலாந்து 36.7 மில்லியன்
பிரான்ஸ் 34 மில்லியன்
இந்தியா 32.1 மில்லியன்
ரஷ்யா 29 மில்லியன்
பிரேசில் 27.7 மில்லியன்
சவுத் கொரியா 27.3 மில்லியன்
கனடா 21.8 மில்லியன்
இத்தாலி 20.8 மில்லியன்
ஸ்பெயின் 17.9 மில்லியன்
மெக்சிகோ 12.5 மில்லியன்
நெதர்லாண்ட்ஸ் 11.8 மில்லியன்

ஆக உலகில் 15 முதல் 22 சதவிகித மக்களே இணையத்தை உபயோகிக்கின்றனர்.மேலும் எந்த இணையதளங்கள் அதிகம் பார்வையிடப்பட்டது என்ற தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.http://www.comscore.com/press/release.asp?press=2698

இயக்குநர் பாலா மன்னிப்பு கேட்க வேண்டும்!

"இயக்குநர் பாலா மன்னிப்பு கேட்க வேண்டும்! ஊனமுற்றோர் நல வாரியம்"
நான் கடவுள் படத்தில் ஊனமுற்றோரை இயக்குநர் பாலா அவமானப்படுத்திவிட்டதாகக் கூறி, அவர் மீது வழக்குத் தொடர தயாராகி வருகிறது தமிழ்நாடு ஊனமுற்றோர் நல வாரியம்.

தமிழ் இயக்குநர்களில் பெரும் நம்பிக்கைக்குரிய இயக்குநராகத் திகழ்பவர் பாலா. திரைப்படத்துறைக்கு வந்து 10 ஆண்டுகளில் 4 படங்கள் மட்டுமே கொடுத்தாலும், நான்குமே தமிழ் சினிமாவை வேறு தளத்துக்கு அழைத்துச் செல்லும் விதத்தில் அமைந்தன.

பாலா இயக்கத்தில் கடைசியாக வந்த படம் நான் கடவுள். இதில் அகோரிகள், பிச்சைக்காரர்கள், உடன் ஊனமுற்றோர் போன்ற உலகின் ஒதுக்கப்பட்ட மனிதர்களின் உலகைப் படம்பிடித்திருந்தார் பாலா.

வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்தப் படத்துக்கும் இப்போது எதிர்ப்புக் குரல்கள்.

இந்தப் படத்தில் கண் பார்வையற்ற ஒரு பெண்ணை குருடி என விளிப்பது போல காட்சிகள் அமைத்தும், ஊனமுற்றவர்களை கொடூர சித்திரவதைகளுக்கு உட்படுத்துவது போல காட்டியும் அந்த சமூகத்தினரின் மன உறுதியைக் குலைத்துவிட்டாராம் பாலா. இதற்காக பாலா மன்னிப்புக் கேட்க வேண்டும், அத்தகைய காட்சிகளை நீக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் வழக்குப் போடுவோம் என்றும் தமிழ்நாடு ஊனமுற்றோர் நல வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த வாரி்யத்தின் உறுப்பினர் என்ஜினீயர் கோபிநாத், ஊனமுற்றோர் சமூக சேவை நிர்வாகிகள் ரமேஷ், வைரமணி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த நான் கடவுள் திரைப்படத்தில் உடல் ஊனமுற்றோரை பிச்சைக்காரர்களாகவும் கண்பார்வையற்ற பெண்ணை குருடி என விளிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் உடல் ஊனமுற்றோர், கண் பார்வையற்றோர், வாய் பேச இயலாதோரை வில்லன் நடிகர் துன்புறுத்தி அடித்து, உதைத்து பிச்சை எடுக்க வைப்பது போல காட்சிகள் அமைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.

பார்வையற்ற பெண் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை பூஜாவிற்கு இழைக்கப்படும் கொடுமைகளை தாங்க முடியாமல் அவரே தன் உயிரை எடுப்பதென்பது ஊனமுற்ற சமுதாயத்தினருக்கு தவறான தகவலாகவும், ஒத்து கொள்ள முடியாத ஒன்றாகவும் உள்ளது.

உடல் ஊனமுற்றோர், கண் பார்வையற்றோர் தன்னம்பிக்கையுடன் உழைத்து பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் காலத்தில், ஊனமுற்றோரை இழிவுப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள நான் கடவுள் படத்தின் காட்சிகளையும், வசனங்களையும் நீக்க வேண்டும். இயக்குனர் பாலா மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் நீதிமன்றத்தை அணுகுவதை தவிர வேறு வழியில்லை, என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

காங்கிரசுக்கு அதிக தொகுதிகள்: பணிகிறது திமுக‍!

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இம்முறை அதிக சீட் வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மேலும் தேமுதிகவுடன் கூட்டணி என்பதில் காங்கிரஸ் பிடிவாதமாக இருப்பதால் தேமுதிகவுக்கும் சேர்ந்து கூடுதலாக 5 தொகுதிகளை திமுகவிடம் காங்கிரஸ் பெற்றாக வேண்டும்.
காங்கிரஸின் இந்தக் கோரிக்கைக்கு இம்முறை பணிவதைத் தவிர திமுகவுக்கு வேறு வழியில்லை. எனவே 15 தொகுதிகளுக்குக் குறையாமல் அக்கட்சிக்கு திமுக ஒதுக்கிவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விவகாரங்களையெல்லாம் கூட்டத்தில் விவாதித்துள்ளனர். சம்பந்தப்பட்ட மாநிலங்களின் மேலிடப் பார்வையாளர்களும் இதில் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இன்று அல்லது நாளை கூட்டணி குறித்த இறுதி முடிவுகளை காங்கிரஸ் அறிவிக்கும்.

உலகின் முதல் ATM இயந்திரம்

எந்த நேரத்திலும் பணம் எடுத்து கொள்ளவும்,வங்கி பரிவர்த்தனைகள் செய்யவும் இன்று ATM களின் பங்கு அன்றாட வாழ்வில் முக்கியமானது.நகரங்களில் மட்டுமன்றி சிறிய ஊர்களிலும் ATM கள் புழக்கத்திற்கு வந்து வங்கிகளுக்கு அருகே மட்டுமின்றி வணிக அங்காடிகள்,ரயில்,விமான நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் புழங்கும் இடங்களிலும் வந்து இன்று அன்டார்டிகாவிலும் ஒரே ஒரு ATM இருக்கிறது.உலகின் தென்கோடி ATM இதுவே ஆகும்.
ATM கண்டுபிடித்த ஜான் ஷெபர்ட் பாரன்

உலகின் முதல் ATM பார்க்லேஸ்(Barclays) வங்கியால் 1967 ஆம் ஆண்டு வடக்கு லண்டனில் உள்ள என்பீல்ட் டவுன்(Enfield Town) என்னுமிடத்தில் அமைக்கப்பட்டது.ஜான் ஷெபர்ட் பாரன்(John Sheperd Barron) கண்டுபிடித்த ATM இயந்திரத்தை பற்றி அவர் கூறும் போது,காசு போட்டால் சாக்லேட் தரும் இயந்திரத்தின் இயங்குமுறையை அடிப்படையாக கொண்டே ATM இயந்திரத்தை கண்டுபிடித்ததாக கூறுகிறார்.அப்போதே PIN எண்ணை உள்ளீடும் முறை கண்டுபிடிக்கப்பட்டு விட்டது.முதலில் ஆறு எண்களை கொண்டு PIN எண்ணை உபயோகிக்கலாம் என நினைத்த அவர் மனைவி நான்கு எண்களுக்கு மேல் தன்னால் நினைவில் வைத்து கொள்ளமுடியாது என சொன்னதால் ஷெபர்ட் நான்கு எண்களை ATM இயந்திரத்திற்கு PIN எண்ணாக வைத்தார்.அதுவே இன்று உலக அளவில் எல்லா ATM இயந்திரங்களிலும் உபயோகப்படுத்தப்படுகிறது.

ரெக் வார்னி முதன் முதலாக ATM மூலம் பணம் எடுக்கும்போதுமுதல் முதலில் ATM இயந்திரத்தை உபயோகப்படுத்தி பணம் எடுத்தவர் இங்கிலாந்து தொலைக்காட்சி நாடக நடிகர் ரெக் வார்னி(Reg Varney).ஒரு முறை உபயோகித்தால், ஒரு 10 பவுண்ட் நோட்டை மட்டுமே மெல்லிய காகித பையில் வைத்து கொடுத்தது இந்த முதல் ATM இயந்திரம்.

Bombay 100 Years Back/Vintage Mumbai - Part2
















Bombay 100 Years Back/Vintage Mumbai - Part1
















Tendulkar and Bhajji with NSG Commandos











Monday, March 9, 2009

Sexy Shot !........


Two dancers celebrate another boundary in Trinidad, West Indies v England, 5th Test, Trinidad, March 8, 2009

தெண்டுல்கர் 43-வது சதம்

நியூசிலாந்துக்கு எதிராக இன்று நடந்த 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தெண்டுல்கர் மிகவும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 101 பந்துகளில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் அவர் 100 ரன்னை தொட்டார்.
425-வது ஒருநாள் போட்டியில் விளையாடும் தெண்டுல்கருக்கு இது 43-வது “சதம்” ஆகும். ஒரு ஆண்டு இடைவெளிக்கு பிறகு அவர் செஞ்சூரி அடித்தார். கடைசியாக கடந்த ஆண்டு மார்ச் 2-ந்தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னி மைதானத்தில் 117 ரன் எடுத்தார். அதன்பிறகு அவர் 8 ஆட்டங்கள் மட்டுமே விளையாடி இருக்கிறார். டெஸ்ட் போட்டியில் தெண்டுல்கர் 41 சதம் அடித்துள்ளார். டெஸ்ட்டிலும், ஒருநாள் போட்டியிலும் அதிக சதம் அடித்த சாதனை வீரராக அவர் உள்ளார்.

இதேபோல யுவராஜ்சிங் ஆட்டமும் இன்று அதிரடியாக இருந்தது. அவர் 60 பந்தில் 87 ரன் (10 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தார்.

என்ன கொடுமை சார் இது


Vijaya Tendulkar !..................


Priyamani in Bikni - Really Hot !...




அவுட்சோர்ஸிங் நாடுகளில் இந்தியா தொடர்ந்து முன்னணியில் இருக்கும் - மூடீஸ்

டெல்லி: அவுட்சோர்ஸிங் செய்ய சிறந்த நாடுகள் வரிசையில் இந்தியா தொடர்ந்து முன்னணியில் இருக்கும் என அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நிதி நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது.அவுட்சோர்சிங் செய்ய இந்தியா தான் சிறந்த இடம். குறைந்த விலையில் இங்கு கிடைக்கும் சேவைகள் வேறு எங்கும் கிடைக்காது. எனவே என்னதான் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் தொடர்ந்து இந்தியாவே முன்னணியில் இருக்கும் என மூடீஸ் தெரிவித்துள்ளது.சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா, தாக்கல் செய்த பட்ஜெட்டில், அவுட்சோர்ஸிங் செய்யும் நிறுவனங்களுக்கு வரி சலுகை கிடையாது என அறிவித்தார். இதனால், ஏற்கனவே உலக பொருளாதார வீழ்ச்சியால் சரிவை சந்தித்திருக்கும் இந்திய அவுட்சோர்ஸிங் நிறுவனங்கள் ஆட்டம் கண்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், அமெரிக்க நிறுவனங்கள் அவுட்சோர்ஸிங் செய்ய ஏற்ற இடம் இந்தியா தான் என்கிறது அமெரிக்காவின் நிதி முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றான மூடீஸ்.இது குறித்து அந்நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் ஷெர்மான் சான் கூறுகையில்,அவுட்சோர்ஸிங் செய்ய ஏற்ற நாடுகளில் இந்தியாவுக்கு தான் முதலிடம். இதற்கு இந்தியாவில் இருக்கும் தொழில்நுட்ப வல்லுனர்களும், ஆங்கில புலமை அதிகம் கொண்ட இளைஞர்களும் தான் காரணம்.இந்த வேலைகளை இதைவிட குறைந்த செலவில் மேற்கு ஐரோப்பாவில் செய்ய முடியாது.தற்போது உலக பொருளாதார நெருக்கடியால் இந்தியாவில் பிபிஓ துறை பின்னடைவை சந்தித்திருக்கும். இது விரைவில் மீண்டு வரும். தற்போது முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவதால் வளர்ச்சி வேகம் மெதுவாக தான் இருக்கும் என்றார் சான்.

இலங்கை: ரஜினி ரசிகர்கள் அமைதிப் போராட்டம்!


பெங்களூரு: ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கர்நாடக ரஜினி ரசிகர்கள் அமைதிப் போராட்டம் நடத்தினர்.இலங்கைப் பிரச்சினை முன்னெப்போதும் இல்லாத உச்ச கட்டத்தை அடைந்துள்ள நிலையில் தங்களையும் அதில் ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றனர் ரஜினி ரசிகர்கள். கர்நாடக மாநில ரஜினி சேவா சங்கத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் மகாத்மா காந்தி சாலையில் உள்ள காந்தி சிலை அருகே ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து அமைதிப் போராட்டம் நடத்தினர். ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலைக் கண்டித்தும், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தியும் பலர் பேசினார்கள். இந்த போராட்டத்தில் ரஜினி ரசிகர்களுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, உலகத் தமிழ் கழகம், அகில இந்திய மனித உரிமைக் கழகம், திராவிடர் கழகம், கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றவர்கள்.

Tallest Female in the World !...
















ஆந்திர தேர்தல் களத்தில் ஷகிலா!


சினிமா காட்சிகளையும் மிஞ்சும் வகையில் பல நேரங்களில் நிஜ காட்சிகள் அமைந்துவிடுகின்றன.
அதுவும் அரசியலில் கேட்கவே வேண்டாம்.
தூள் திரைப்படத்தில் கவர்ச்சி நடிகை ஷகிலாவை மையப்படுத்தி ஒரு காட்சியை அமைத்திருப்பார் இயக்குநர் தரணி. ஷகிலா படம் ஒன்றுக்கு அமைச்சர் நற்சாட்சிக் கடிதம் தருவது போலவும், அதனால் அவர் பதவியே பறிபோவது போலவும் அந்தக் காட்சி இருக்கும்.
ஆனால் நிஜத்தில் அதெல்லாம் ஜுஜுபி என்பது போல நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.
கவர்ச்சி குண்டு ஷகீலாவை தேர்தல் களமிறக்குகிறது சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி.ஆனால் அவர் வேட்பாளராக நிற்கவில்லை, தெலுங்கு தேசம் கட்சியின் ஸ்டார் பேச்சாளராக, பிரச்சாரகராக களமிறக்கப்பட்டுள்ளார்.
இந்த முறை வெறும் பிரச்சாரத்துக்கு வரும் அவர், அடுத்து வரும் தேர்தல்களில் வேட்பாளராகக் களமிறங்குவார் என கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.

கடந்த முறை தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக - திமுக என்னென்ன கூத்துக்களை அரங்கேற்றியதோ, அவை அனைத்தையும் இந்த முறை அரங்கேற்றி வருகிறது தெலுங்குதேசம்.
ஆந்திராவில் ஏகப்பட்ட நட்சத்திரங்களை ஒவ்வொரு கட்சியும் வலை வீசி இழுக்கத் தொடங்கி விட்டன.
காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சிகள் முக்கிய நட்சத்திரங்களை, மக்களை கவரக் கூடிய நட்சத்திரங்களை குறிப்பாக நடிகைகளை தங்களது பிரசார வட்டத்திற்குள் கொண்டு வர ஆரம்பித்துள்ளன.
தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் அணித் தலைவியான ரோஜா இதில் முன்னணியி்ல இருக்கிறார். அவரது பிரசார ஸ்டைல் ஏற்கனவே பெருத்த அலைகளைப் பரப்பியுள்ளது. திருச்சானூரில் போட்டியிடும் அவர், தெருச்சண்டை, குழாயடிச் சண்டை ரேஞ்சுக்கு இறங்கி அடித்துக் கொண்டிருக்கிறார்.
அதேபோல முன்னணி நட்சத்திரமான திரிஷாவும் காங்கிரசுக்கு பிரசாரம் செய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷகிலா-இளைஞர்களைக் கவரவாம்!!
இந்த நிலையில் தெலுங்கு தேசத்திற்காக வாக்கு சேகரிக்க கவர்ச்சிப் புயல் ஷகீலாவை அக்கட்சி இழுத்துள்ளது.
இளைஞர்களைக் கவரும் வகையில், அவர்களின் அபிமானத்தைப் பெற்ற (!!) முன்னணி நாயகி ஷகிலாவைக் களமிறக்குவதில் மகிழ்ச்சி அடைவதாக அக்கட்சி தெரிவி்த்துள்ளது.
தமிழ், மலையாளம், கன்னடம் என மூன்று தென்மாநில மக்களுக்கும் திரையில் ‘தரிசனம்’ தந்து வந்த ஷகிலா, ஆந்திர மக்களை நேரில் சென்று ஓட்டுக் கேட்டு அதிர்ச்சி தரப் போகிறாராம்.

வங்கக் கடலில் திடீர் புயல் சின்னம்-தென் மாவட்டங்களில் கன மழை

சென்னை: வங்கக் கடலில் திடீரென குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து காவிரி டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. சென்னையில் தூறல் காணப்படுகிறது.தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இரவு நேரங்களில் பனி கொட்டுகிறது. இந்த நிலையில், தென் மேற்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளது. இதையடுத்து இன்று காலை முதல் வானிலை அப்படியே தலைகீழாக மாறியது.காவிரி டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் காலை முதல் கன மழை பெய்து வருகிறது. நாகை, சீர்காழி, தஞ்சை, திருவாரூர், மன்னார் குடி உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளது.அதேபோல ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை பெய்துள்ளது.சென்னையில் காலை முதலே வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்படுகிறது. ஆங்காங்கு தூறல் மழை காணப்படுகிறது.இந்த நிலை மேலும் 24 மணி நேரத்திற்கு நீடிக்கும் எனவும், காவிரி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tuesday, February 24, 2009

மேல்மலையனூரில் மயான கொள்ளை



செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த மயானக் கொள்ளையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் மாசி பெருவிழா, நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இரண்டாம் நாள் விழாவான நேற்று, மயானக் கொள்ளை நடந்தது.கோவிலில் இருந்து, விஸ்வரூப கோலத்தில் மயானத்தில் எழுந்தருளிய அங்காளம்மன், அங்கு நடந்த மயானக் கொள்ளையில், பிரம்ம கபாலத்தை ஆட்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது.மயானக்கொள்ளை விடுவதற்காக, பக்தர்கள், உணவுப் பொருட்களை குவித்தனர். கோவிலில் இருந்து அங்காளம்மன் புறப்பட்டு வந்த போது, சாமி வந்து ஆக்ரோஷத்துடன் ஆடிய பக்தர்கள், தங்கள் பற்களால், உயிருடன் இருந்த கோழியை கடித்து அம்மனுக்கு பலி கொடுத்தனர்.


அம்மன் வேடமிட்ட அரவாணிகள் தங்கள் மீது நடந்துச் சென்றால், தோஷம் நீங்கும் என கருதி, பக்தர்கள் பலர் நீண்ட வரிசையில் படுத்தனர். அவர்கள் மீது அரவாணிகள் நடந்துச் சென்றனர். இதில், தமிழகம், கர்நாடகம், புதுச்சேரியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.200 ஆடுகளை கடித்து ரத்தம் குடித்த வாலிபர்கள்: ஆத்தூர்: சேலம் ஆத்தூர், வீரகனூர், கெங்க வல்லி உள்ளிட்ட பகுதிகளில் மயானக்கொள்ளை திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் திருவிழாவை காண வந்தவர்கள் ஏறி நின்ற மரம் முறிந்து 50 பேர் காயமுற்றனர். 200 க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் கோழிகளை, வாலிபர்கள் வாயால் கடித்து குதறினர். சுவேதா நதிக்கரையில் உள்ள மயானத்தில் இப்பகுதி மக்கள் அங்காள பரமேஸ்வரியை அலங்காரம் செய்து வைத்து வணங்கினர். இதற்கு சுடுகாட்டில் இருந்த எலும்புகள், மற்றும் பல் ஆகியவற்றை எடுத்து அலங்கரித்தனர்.


தொடர்ந்து வணங்கி 200 க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் கோழிகளை, வாலிபர்கள் வாயால் கடித்து குதறினர். பெண்கள் குழந்தை வரம் கேட்டு மடிப்பிச்சை கேட்டு ரத்தச்சோறு சாப்பிட்டனர். இந்த திருவிழாவை காண வந்த பக்தர்கள் வாத மரம் மீது ஏறி நின்றனர். இதில் மரம் முறிந்து விழுந்து 50 பேர் காயமுற்றனர். இவர்கள் அனைவருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. திருவிழாவையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ரத்தச்சோறு சாப்பிட்டால் வேண்டியது கிடைக்கும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். சென்னை தண்டையார் பேட்டையில் மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு மயான கொள்ளையில் அரக்கனை வதம் செய்ய பிரம்மாண்ட மணல் சிற்பம். தயாராக வடித்து வைக்கப்பட்டிருந்தது.

Sunday, February 22, 2009

Slumdog Millionaire Soundtrack- Oscar Award Winning Song

திருப்பூர் மாவட்டத்தை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்

திருப்பூர்: தமிழகத்தின் 32வது மாவட்டமாக திருப்பூர் மாவட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

கோவை, ஈரோடு மாவட்டங்களைப் பிரித்து புதிய திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், அவினாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், காங்கேயம் ஆகிய 6 தாலுகாக்கள் இடம் பெற்றுள்ளன.

திருப்பூர் மாவட்டத் தொடக்க விழா இன்று மாலை திருப்பூர் இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்தது.

உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டத்தைத் தொடங்கி வைத்தார். வருவாய்த்துறை அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி தலைமை தாங்கினார்.

இந்த விழாவில் சூலூர் புதிய தாலுகாவையும் அமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

புதிய கலெக்டர் சமயமூர்த்தி

திருப்பூர் மாவட்ட தனி அதிகாரியாக செயல்பட்டு வந்த சமயமூர்த்தி ஐ.ஏ.எஸ். புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இன்று காலை அவர் பதவியேற்றுக் கொண்டார்.

2 ஆஸ்கர் விருதுகளை வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான்.. 'ஜெய் ஹோ'!!!


நியூயார்க்: ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் மிகச் சிறந்த இசையமைத்தற்காக ஏ.ஆர்.ரஹ்மானு்ககு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தின் ஜெய் ஹோ பாடல் மிகச் சிறந்த பாடலாக தேர்வு செய்யப்பட்டு இன்னொரு விருதும் வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் பிரிவி்ல் ஒரு விருதும், ஜெய் ஹோ விருதுக்கு ஒரு விருதுமாக ரஹ்மான் இரு ஆஸ்கர் விருதுகளை வென்றார்.

ஒரிஜினல் ஸ்கோருக்கான முதல் விருதை வென்ற ரஹ்மான் ஆஸ்கர் விருது விழா நடக்கும் கோடாக் தியேட்டரில் இந்தப் படத்தின் பாடலான 'ஜெய் ஹோ' பாடலை மேடையில் ஆடல் பாடலுடன் அரங்கேற்றி ஆஸ்கர் அரங்கையே அதிரச் செய்தார்.

இந் நிலையில் சிறந்த பாடலுக்கான விருதும் ஜெய் ஹோவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மேடையில் ஆடிக் கொண்டிருந்த நிலையில் ரஹ்மானுக்கு இரண்டாவது விருதும் கிடைத்தது.

சவுண்ட் மி்க்சி்ங்-பூக்குட்டிக்கு:

இந்தப் படத்துக்கு சிறந்த சவுண்ட் மிக்சிங்குக்கான விருதும் கிடைத்துள்ளது. இந்த விருதை தமிழகத்தைச் சேர்ந்த சவுண்ட் மிக்சிங் நிபுணர் பூக்குட்டி வென்றுள்ளார்.

மேலும் சிறந்த இயக்குனர், எடிட்டிங் உள்பட ஸ்லம்டாக் மில்லியனர் மேலும் 5 விருதுகளையும் வென்றுள்ளது. மொத்தத்தில் இந்தப் படம் 7 விருதுகளை வென்றுள்ளது.

ரஹ்மான் விருதை வென்றதையடுத்து சென்னையில் உள்ள ரஹ்மானின் வீட்டில் பெரும் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. அவரது வீட்டில் குவிந்துள்ள ரசிகர்களும் உறவினர்களும் நண்பர்களும் கேக் வெட்டி ஆடிப் பாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவரது வீட்டின் வெளியில் ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடி வருகின்றனர்.

ரஹ்மானின் தங்கை ரெஹனா கூறுகையில், இந்த விருதை கடவுளுக்கு அர்ப்பணிக்கிறோம் என்றார்.

Friday, February 20, 2009

12 இடங்களில் கொங்கு நாடு முன்னேற்ற பேரவை போட்டி

கோவை: லோக்சபா தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்க மாட்டோம். 12 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவோம் என புதிதாகப் பிறந்துள்ள கொங்கு நாடு முன்னேற்றப் பேரவை கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கொங்கு நாடு முன்னேற்றப் பேரவை கட்சி துவக்க விழா கோவையில் பிரமாண்டமாக நாடைபெற்றது.

இந்த நிலையில் அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் சிலர் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்தனர்.

இதனால் வரும் லோக் சபா தேர்தலில் கொங்கு நாடு முன்னேற்றப் பேரவை அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.



இந்த நிலையில்,கொங்கு நாடு மக்கள் முன்னேற்றப் பேரவை மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கோவையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

புதிதாக துவங்கப்பட்டுள்ள எங்கள் கட்சிக்கு திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், ஆகிய கட்சிகள் வாழ்த்து தெரிவித்து, நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்திருந்தனர்.

அந்த அடிப்படையில் தான் நாங்கள் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினோம். லோக் சபா தேர்தல் குறித்தோ, கூட்டணி குறித்தோ அவரிடம் எதுவம் பேசவில்லை.

கோவை, நீலகிரி, பொள்ளாட்சி, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கரூர் ஆகிய 12 தொகுதிகளில் கொங்கு நாடு முன்னேற்றப் பேரவை தனித்து போட்டியிடும் என்றார்.