நியூசிலாந்துக்கு எதிராக இன்று நடந்த 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தெண்டுல்கர் மிகவும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 101 பந்துகளில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் அவர் 100 ரன்னை தொட்டார்.425-வது ஒருநாள் போட்டியில் விளையாடும் தெண்டுல்கருக்கு இது 43-வது “சதம்” ஆகும். ஒரு ஆண்டு இடைவெளிக்கு பிறகு அவர் செஞ்சூரி அடித்தார். கடைசியாக கடந்த ஆண்டு மார்ச் 2-ந்தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னி மைதானத்தில் 117 ரன் எடுத்தார். அதன்பிறகு அவர் 8 ஆட்டங்கள் மட்டுமே விளையாடி இருக்கிறார். டெஸ்ட் போட்டியில் தெண்டுல்கர் 41 சதம் அடித்துள்ளார். டெஸ்ட்டிலும், ஒருநாள் போட்டியிலும் அதிக சதம் அடித்த சாதனை வீரராக அவர் உள்ளார்.
இதேபோல யுவராஜ்சிங் ஆட்டமும் இன்று அதிரடியாக இருந்தது. அவர் 60 பந்தில் 87 ரன் (10 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தார்.

No comments:
Post a Comment