Wednesday, March 11, 2009

உலகின் முதல் ATM இயந்திரம்

எந்த நேரத்திலும் பணம் எடுத்து கொள்ளவும்,வங்கி பரிவர்த்தனைகள் செய்யவும் இன்று ATM களின் பங்கு அன்றாட வாழ்வில் முக்கியமானது.நகரங்களில் மட்டுமன்றி சிறிய ஊர்களிலும் ATM கள் புழக்கத்திற்கு வந்து வங்கிகளுக்கு அருகே மட்டுமின்றி வணிக அங்காடிகள்,ரயில்,விமான நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் புழங்கும் இடங்களிலும் வந்து இன்று அன்டார்டிகாவிலும் ஒரே ஒரு ATM இருக்கிறது.உலகின் தென்கோடி ATM இதுவே ஆகும்.
ATM கண்டுபிடித்த ஜான் ஷெபர்ட் பாரன்

உலகின் முதல் ATM பார்க்லேஸ்(Barclays) வங்கியால் 1967 ஆம் ஆண்டு வடக்கு லண்டனில் உள்ள என்பீல்ட் டவுன்(Enfield Town) என்னுமிடத்தில் அமைக்கப்பட்டது.ஜான் ஷெபர்ட் பாரன்(John Sheperd Barron) கண்டுபிடித்த ATM இயந்திரத்தை பற்றி அவர் கூறும் போது,காசு போட்டால் சாக்லேட் தரும் இயந்திரத்தின் இயங்குமுறையை அடிப்படையாக கொண்டே ATM இயந்திரத்தை கண்டுபிடித்ததாக கூறுகிறார்.அப்போதே PIN எண்ணை உள்ளீடும் முறை கண்டுபிடிக்கப்பட்டு விட்டது.முதலில் ஆறு எண்களை கொண்டு PIN எண்ணை உபயோகிக்கலாம் என நினைத்த அவர் மனைவி நான்கு எண்களுக்கு மேல் தன்னால் நினைவில் வைத்து கொள்ளமுடியாது என சொன்னதால் ஷெபர்ட் நான்கு எண்களை ATM இயந்திரத்திற்கு PIN எண்ணாக வைத்தார்.அதுவே இன்று உலக அளவில் எல்லா ATM இயந்திரங்களிலும் உபயோகப்படுத்தப்படுகிறது.

ரெக் வார்னி முதன் முதலாக ATM மூலம் பணம் எடுக்கும்போதுமுதல் முதலில் ATM இயந்திரத்தை உபயோகப்படுத்தி பணம் எடுத்தவர் இங்கிலாந்து தொலைக்காட்சி நாடக நடிகர் ரெக் வார்னி(Reg Varney).ஒரு முறை உபயோகித்தால், ஒரு 10 பவுண்ட் நோட்டை மட்டுமே மெல்லிய காகித பையில் வைத்து கொடுத்தது இந்த முதல் ATM இயந்திரம்.

No comments: