சர்வதேச பயங்கரவாதியான பின்லேடன், கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருந்து வருகிறான். அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தகர்ப்பு உள்ளிட்ட பல்வேறு நாசவேலைகளில் தொடர்புடைய அவனை, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமாக தேடி வருகின்றன.இந்நிலையில், அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட விஞ்ஞான ரீதியான ஆய்வில், பின்லேடன் ஒளிந்திருக்கும் இடம் பற்றிய தகவல் தெரிய வந்துள்ளது.
செயற்கை கோள் உதவியுடன் நடைபெற்ற புவியியல் ஆய்வில், பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பராசினார் நகரில் அவன் பதுங்கி இருக்கும் விவரம் தெரிய வந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து பாகிஸ்தானுக்குள் 12 மைல் உட்புறமாக அமைந்திருக்கும் பராசினாரில், சுற்றுச்சுவருடன் கூடிய 3 கட்டிடங்களில் ஒன்றில் பின்லேடன் மறைந்திருக்கலாம் என்று, ஆய்வுக்குழுவின் தலைவர் தாமஸ் கில்லஸ்பி தெரிவித்திருக்கிறார். விமானங்களின் பார்வையில் இருந்து தப்புவதற்காக, அவன் ஒளிந்திருக்கும் கட்டிடம் மரங்களால் சூழப்பட்டுள்ளது.
பின்லேடன் தனிமையில் ஒளிந்து இருந்தாலும், அவனுக்கு பாதுகாப்பாக சில மெய்க்காப்பாளர்கள் இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. மின்சார வசதியுடன் கூடிய அந்த மறைவிடத்தில் பின்லேடனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வரலாம் என்றும் தாமஸ் கில்லஸ்பி கூறி இருக்கிறார்.
பின்லேடன் தொடர்பாக கிடைத்த பல்வேறு புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட செயற்கை கோள் படங்கள் மற்றும் இதர தொழில் நுட்ப உதவியுடன் இந்த ஆய்வு நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment